இன்றைய ராசி பலன்கள் (13.08.2021)

astrology
By Nandhini Aug 13, 2021 05:50 AM GMT
Report

மேஷம்

நண்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். உங்களுடைய முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடையும். கணவன் மனைவி உறவு சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும், ஒற்றுமை நன்றாக இருக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்களால் மகிழ்ச்சி உண்டாகும்.

ரிஷபம்

நண்பர்களுக்கு புதிய தொழில் வாய்ப்புகள் உருவாகும். கணவன் மனைவி உறவு ஒற்றுமையாக இருக்கும். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருப்பவர்களுக்கு தீர்வு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பல புதிய வாய்ப்புகளைப் பெறுவார்கள்.

மிதுனம்

நண்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். உங்களுடைய திறனை வெளிப்படுத்தும் நல்ல நாள் ஆகும். பெண்களுக்கு உன்னதமான நாள் ஆகும். கணவன் மனைவி ஒற்றுமை மேம்படும். நிர்வாகத்தில் நல்ல பெயர் கிடைக்கும்.

கடகம்

நண்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி ஒற்றுமை மேம்படும். வெளிநாடு செல்ல முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும் நாள் ஆகும். ஒரு சிலருக்கு சுபச் செலவுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.

சிம்மம்

நண்பர்களுக்கு இன்றைய நாள் இனிய நாள் ஆகும். சுபச் செலவுகள் உங்களை தேடி வரும். திருமண காரியங்கள் கைகூடி வரும். கணவன் மனைவி உறவு அந்நியோன்யமாக இருக்கும். வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவர்.

கன்னி

நண்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல இனிமையான நிகழ்வுகளை தரக்கூடிய நாளாகவே செல்லும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சற்று வேலைப்பளு அதிகமாக தான் இருக்கும். இருப்பினும், நல்ல பெயர் பெறுவீர்கள். சோசியல் மீடியாவில் அதிக நேரம் செலவிட வாய்ப்பு உண்டு. என்பதால் நேரத்தை மிச்சப்படுத்தவும்.

துலாம்

நண்பர்களுக்கு இன்றைய நாள் இனிய நாள் ஆகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை சற்று அதிகமாக இருந்தாலும் அவைகளில் வெற்றி கிடைக்கும். கணவன் மனைவி உறவு சிறு சிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அன்புடைய தாகவே இருக்கும்.

விருச்சிகம்

நேயர்களுக்கு இன்றைய நாள் பணிச்சுமை அதிகமாக இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமையில் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அவற்றை திறமையாக சமாளிப்பீர்கள். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் சற்று காலதாமதமாக வாய்ப்பு உண்டு.

தனுசு

நண்பர்களுக்கு இன்றைய நாள் இனிமையான நாள் ஆகும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். குழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும். உறவினர்கள் வகைகளில் சுப காரியங்கள் தொடர்பான தகவல்கள் கிடைக்கும்.

மகரம்

அன்பர்களுக்கு இன்றைய நாள் இனிமையான நாள் ஆகும். வேலைப்பளு அதிகமாக இருப்பதால் உடல் அசதி காணப்படும். உடல் நலம் சீராக இருந்துவரும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும்.

கும்பம்

அன்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். கணவன் மனைவியிடையே சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டு விலகும். திருமணம் மற்றும் சுபகாரியங்கள் ஓரிரு நாட்கள் தாமதமாக வாய்ப்பு உள்ளது.

மீனம்

நண்பர்களுக்கு இன்றைய நாள் முழுவதும் சந்திராஷ்டமம் இருப்பதால் கூடுமான வரை வீண் அலைச்சல்களை தவிர்த்துக் கொள்வது நல்லது. பெண்களைப் பொறுத்தவரை கணவன் மனைவி உறவில் சற்று விட்டுக்கொடுத்து செல்வது பிரச்சனைகள் தீர்ந்து குடும்பத்தில் அமைதி ஏற்பட வழிவகுக்கும்.