இன்றைய ராசி பலன்கள் (12.08.2021)
மேஷம்
சந்திரன் உங்கள் ராசிக்கு 6ம் வீட்டில் பயணம் செய்வதால் திடீர் பண வரவு வரும். வியாபாரத்தில் பணம் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். கடன் பிரச்சினைகள் நீங்கும்.
ரிஷபம்
சந்திரன் உங்களுடைய ராசிக்கு ஐந்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். வேலையில் பணியாட்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
மிதுனம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு நான்காம் வீடான சுக ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். பண வரவை விட செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும் என்றாலும் செலவுகள் அதிகரிக்கும். தேவையற்ற மன உளைச்சல் உண்டாகும்.
கடகம்
சந்திரன் உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் பயணம் செய்கிறார். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். பணம் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும்.
சிம்மம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உறவினர்கள் பிரச்சினைகள் ஏற்படலாம். குடும்ப செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும்.
கன்னி
சந்திரன் உங்கள் ராசியில் பயணம் செய்கிறார். தொழில் சம்பந்தமான வங்கி கடன் எளிதில் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். தடைப்பட்ட சுபகாரியம் கைகூடும். மனதில் திடீர் கவலைகள் உருவாகும். வேலையில் கவனம் தேவை.
துலாம்
சந்திரன் உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். குடும்பத்தில் உள்ளவர்களின் அதிருப்திக்கு ஆளாகுவீர்கள். சிந்தித்து செயல்பட்டால் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்.
விருச்சிகம்
சந்திரன் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். சொத்து சம்பந்தமான வழக்குகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
தனுசு
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். வியாபாரத்தில் லாபம் அமோகமாக இருக்கும். இன்று குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கும்.
மகரம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்கிறார். வியாபாரம் தொழில் முதலீடுகளில் கவனம் தேவை. இன்று உங்களுக்கு ஆரோக்கிய ரீதியாக மருத்துவ செலவுகள் உண்டாகும் கவனம் தேவை.
கும்பம்
சந்திரன் உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் உண்டாகும். குடும்பத்தில் சின்னச் சின்ன பிரச்சினைகள் வரலாம். வியாபாரத்தில் செய்யும் முதலீடுகளில் கவனம் தேவை.
மீனம்
சந்திரன் உங்கள் ராசிக்கு ஏழாம் வீடான களத்திர ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். நண்பர்கள் மூலம் சுபசெய்திகள் தேடி வரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர் பதவிகள் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும்.