இன்றைய ராசி பலன்கள் (11.08.2021)
மேஷம்
சாதகமான நாளாக இருக்கும். லட்சியங்கள் நிறைவேறும். உடன் பணி புரிபவர்கள், உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான அணுகுமுறையைப் பின்பற்றுவது நல்லது. கடின உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும்.
ரிஷபம்
சவாலான நாளாக இருக்கும். ஆன்மிகம், பொழுதுபோக்கில் மனதை செலுத்துவது நல்லது. வேலை சூழல் கடினமாக இருக்கும். கணவன் மனைவி இடையே மோதல் ஏற்படலாம். செலவுகள் அதிகரிக்கும்.
மிதுனம்
மனதில் அமைதி குறைவு ஏற்படும். எந்த ஒரு விஷயத்தையும் அறிவுப்பூர்வமாக அணுகுவது நல்லது. உயர் அதிகாரியுடன் மோதல் ஏற்படலாம். செலவு விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை.
கடகம்
நம்பிக்கையான நாளாக இருக்கும். நண்பர்கள் ஆதரவு கிடைக்கும். வேலை சூழல் சாதகமாக இருக்கும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும்.
சிம்மம்
முன்னேற்றத்துக்கு ஏற்ற நாள் இன்று. இன்றைய நாளை சிறப்பான முறையில் பயன்படுத்திக்கொள்வது நல்லது. வேலை சூழல் சாதகமாக இருக்காது. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவ சர்ச்சையாகக் கூடிய விஷயங்கள் பற்றி பேசாமல் இருப்பது நல்லது.
கன்னி
பதற்றமான உணர்வு அதிகரிக்கும். பாதுகாப்பின்மை உணர்வு ஏற்படும். வேலை சூழல் சாதகமாக இருக்காது. குடும்பத்தில் இனிமையான சூழல் இருக்காது. கணவன் மனைவி இடையே மோதல் ஏற்படலாம்.
துலாம்
அதீத உணர்ச்சிப் பெருக்கான நாளாக இருக்கும். பதற்றத்தைக் கட்டுக்குள் வைப்பது நல்லது. வேலை காரணமாக வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டி வரலாம். கணவன் மனைவி இடையே நட்புறவு பாதிக்கப்படலாம்.
விருச்சிகம்
விருப்பங்கள் நிறைவேறும் நாளாக இருக்கும். முக்கிய முடிவுகள் இன்றைய நாளில் எடுக்கலாம். குடும்பத்தில் அன்பான சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே பிணைப்பு அதிகரிக்கும்.
தனுசு
சாதகமான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்று எடுக்கலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும்.
மகரம்
அமைதியின்மை காணப்படும். ஆன்மிக காரியங்களில் ஈடுபடுவது நல்லது. வேலை, தொழில் சூழல் சாதகமாக இருக்காது. எந்த ஒரு விஷயத்தையும் லேசாக எடுத்துக்கொள்வது நல்லது.
கும்பம்
பலன்கள் தாமதமாக கிடைக்கும். எனவே, நிதானத்துடனும் அமைதியுடனும் இருப்பது நல்லது. அதிக வேலை காரணமாக மன அழுத்தம் ஏற்படும். குடும்பத்தில் நல்லுறவு பாதிக்கப்படலாம். இனிமையான வார்த்தைகளை பேசுவதன் குடும்பத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தலாம்.
மீனம்
வெற்றிகரமான நாளாக இருக்கும். இன்றைய நாளை சாதகமாக பயன்படுத்திக்கொள்வது நல்லது. நிலுவையிலிருந்த வேலை எல்லாவற்றையும் முடிப்பீர்கள். குடும்பத்தில் நல்லுறவு காணப்படும்.