இன்றைய ராசி பலன்கள் (10-8-2021)
மேஷம்
ஓரளவுக்கு சாதகமான நாளாக இருக்கும். உடன் பணி புரிபவர்களுடன் அனுசரித்து நடப்பது நல்லது. வாழ்க்கைத் துணைவரின் விருப்பத்தை அறிந்து செயல்பட வேண்டும்.
ரிஷபம்
மனதைக் கட்டுப்படுத்துவது இன்றைய நாளை சிறப்பானதாக மாற்ற உதவும். வளர்ச்சிக்கு எதிரான செயல்கள் நடைபெறலாம். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் ஏற்படும்.
மிதுனம்
நம்பிக்கையான நாளாக இருக்கும். வெற்றிகரமான நாளாக அமையும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். மனதை அமைதியாக வைத்திருப்பதன் மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சியைத் தழைக்கச் செய்யலாம்.
கடகம்
அமைதியாக இருக்க வேண்டிய நாள். நிதானத்துடனும் ஓய்வுடனும் இருக்க வேண்டும். குடும்பத்தில் அமைதியான சூழல் பாதிக்கப்படலாம். கணவன் மனைவி இடையே மோதல் ஏற்படலாம்.
சிம்மம்
மிதமான பலன்கள் கொண்ட நாளாக இருக்கும். வேலையை முடிப்பதில் திணறல் போக்கு காணப்படும். கணவன் மனைவி இடையே மோதல் ஏற்படலாம். பண வரவுக்கு சிறிதளவு வாய்ப்புள்ளது.
கன்னி
பதற்றமான நாளாக இருக்கும். மனதை ஒருநிலைப்படுத்தி, அமைதியாக வைத்திருப்பது நல்லது. வேலை, தொழில் சூழல் சாதகமாக இருக்காது. கடின உழைப்பை வெளிப்படுத்த வேண்டியிருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவ அமைதியாக இருப்பது நல்லது.
துலாம்
அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். இலக்குகளை எளிதில் அடைவீர்கள். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் அமைதி நலவும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும்.
விருச்சிகம்
ஆக்கப்பூர்வமான நாளாக இருக்கும். புத்துணர்வுடன் இருப்பீர்கள். குடும்பத்தில் இனிமையான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் அதிகரிக்கும்.
தனுசு
பதற்றமான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்க வேண்டாம். வேலைப் பளு அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே மன வருத்தம் ஏற்படலாம்.
மகரம்
சாதகமான நாளாக இருக்காது. வழக்கமான செயல்களைத் தவிர்த்து, பெரிய அளவில் எதிர்பார்ப்புடன் செயலில் இறங்க வேண்டாம். வேலைப் பளு அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும்.
கும்பம்
சுறுசுறுப்பான நாளாக இருக்கும். திட்டமிட்டு செயல்படுவது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே நல்லுறவு மேம்படும்.
மீனம்
இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். இன்று முக்கிய முடிவுகளை எடுக்கலாம். சாதகமான பலன்களைப் பெறுவீர்கள். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும்.