இன்றைய ராசி பலன்கள் - (05.08.2021)

astrology
By Nandhini Aug 05, 2021 07:23 AM GMT
Report

இன்றைய ராசி பலன்கள் - (05.08.2021) | Astrology

மேஷம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு மூன்றாவது வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு பணவரவு நன்றாக இருக்கும். வீட்டுத் தேவைகள் எளிதில் பூர்த்தியாகும், வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.

ரிஷபம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு இரண்டாவது வீட்டில் பயணம் செய்கிறார். வெளியூர் பயணங்களால் அலைச்சல் உடல் சோர்வு ஏற்படும். பெரிய மனிதர்களின் சந்திப்பு புது தெம்பை தரும். இன்று எந்த காரியத்தை செய்தாலும் சிறுதடை பின் நல்லது நடக்கும்.

மிதுனம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்குள் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் நற்பலனைத் தரும். உத்தியோகத்தில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும்.

கடகம்

சந்திரன் உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். பணவரவு தாராளமாக இருப்பதால் கடன் பிரச்சினை குறையும்.

சிம்மம்

சந்திரன் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு பொருளாதார நிலை நன்றாக இருக்கும். பழைய நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும்.

கன்னி

சந்திரன் உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் தேடி வரும்.

துலாம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்கிறார். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மேலதிகாரிகளால் நெருக்கடிகள் ஏற்படும். முன்கோபத்தை குறைப்பது நல்லது.

விருச்சிகம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் சற்று குழப்பமாகவே காணப்படுவீர்கள். வாகனங்களில் செல்லும் பொழுது கவனமும் நிதானமும் தேவை.

தனுசு

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஏழாவது வீட்டில் பயணம் செய்கிறார். வியாபாரத்தில் எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக மாறுவார்கள். மனதில் நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும் நாளாகும்.

மகரம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஆறாவது வீட்டில் பயணம் செய்கிறார். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உங்களின் திறமைகள் பளிச்சிடும் அலுவலகத்தில் மேலதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். இன்று குடும்பத்தில் அமைதி நிலவும். 

கும்பம்

சந்திரன் உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். உடன்பிறந்தவர்கள் வழியாக சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். வேலையில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

மீனம்

சந்திரன் உங்கள் ராசிக்கு நான்காம் வீடான சுக ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் தொட்ட காரியம் அனைத்தும் வெற்றியில் முடியும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும்.