இன்றைய ராசி பலன்கள் (03.08.2021)
மேஷம்
குடும்பத்தில் உள்ளவர்களிடம் ஒற்றுமை பலப்படும். உறவினர்கள் வழியாக உதவிகள் கிடைக்கும். இன்று எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள்.
ரிஷபம்
சந்திரன் உங்கள் ராசியில் பயணம் செய்கிறார். வியாபாரத்தில் புதிய நபரின் அறிமுகத்தால் அனுகூலமான பலன்கள் கிட்டும். இன்று குடும்பத்தில் தாராள தன வரவு உண்டாகும்.
மிதுனம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகும். வியாபாரத்தில் லாபம் ஓரளவு இருக்கும். அஷ்டம சனியால் இன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படலாம்.
கடகம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று உற்றார் உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பிள்ளைகளால் அனுகூலம் ஏற்படும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.
சிம்மம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பூர்வீக சொத்துகளை விற்பனை செய்வதில் மூலம் லாபம் கிடைக்கும்.
கன்னி
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்கிறார். நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு உடனிருப்பவர்களால் தடைகள் ஏற்படலாம்.
துலாம்
சந்திரன் இன்றைய தினம் எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் சற்று மனகுழப்பத்துடன் காணப்படுவீர்கள். எதிலும் கவனம் தேவை. பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது.
விருச்சிகம்
சந்திரன் உங்கள் ராசிக்கு ஏழாவது வீட்டில் பயணம் செய்கிறார். வியாபாரத்தில் செய்யும் முதலீடுகளில் லாபம் அதிகரித்து வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.
தனுசு
சந்திரன் உங்கள் ராசிக்கு ஆறாவது வீட்டில் பயணம் செய்கிறார். இன்று தொழில் தொடர்பான நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் நற்பலனை தரும். குடும்பத்தில் திடீர் என்று நல்ல செய்தி வரும், சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்.
மகரம்
சந்திரன் உங்கள் ராசிக்கு ஐந்தாவது வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் உடன்பிறந்தவர்களால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.
கும்பம்
சந்திரன் உங்கள் ராசிக்கு நான்காவது வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் இதுவரை இருந்த எதிர்ப்புகள் குறைந்து முன்னேற்றம் அதிகரிக்கும்.
மீனம்
சந்திரன் உங்கள் ராசிக்கு மூன்றாவது வீட்டில் பயணம் செய்கிறார். தொழில் வியாபாரத்தில் அனுகூலமான பலன் கிடைக்கும். சுபகாரிய முயற்சியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.