இன்றைய ராசி பலன்கள் (31.07.2021)

மேஷம்
ஓரளவுக்கு வெற்றிகரமான நாளாக இருக்கும். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். கணவன் மனைவி இடையே நல்லுறவு பாதிக்கப்படலாம். நிதி நிலை சுமாராக இருக்கும்.
ரிஷபம்
சுமாரான நாளாக இருக்கும். தடைகள் பலவற்றை சந்திக்க வேண்டியிருக்கும். வேலை சூழல் சாதகமாக இருக்காது. கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் பாதிக்கப்படலாம்.
மிதுனம்
சீரான நாளாக இருக்கும். மனதில் நிதானம், அமைதி காணப்படும். கணவன் மனைவி இடையே திருப்தியான மனநிலை காணப்படும். காதல் உணர்வை வெளிப்படுத்துவீர்கள்.
கடகம்
சாதகமான நாளாக இருக்கும். வேலை, தொழில் சூழல் சிறப்பாக இருக்கும். வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் நிலவ அமைதி காப்பது நல்லது. திடீர் பயணம் மேற்கொள்ள வேண்டி வரலாம்.
சிம்மம்
வெற்றிகரமான நாளாக இருக்கும். வேலையிடச் சூழல் உற்சாகமானதாக இருக்கும். குடும்பத்தில் இதமான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும்.
கன்னி
இன்று சுமாரான நாளாக இருக்கும். உங்கள் திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்காது. குடும்பத்தில் மகிழ்ச்சி காணப்படும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு மேம்படும்.
துலாம்
சீரான நாளாக இருக்கும். உங்கள் முழுத் திறமையை வெளிப்படுத்தி இலக்குகளை அடைவீர்கள். குடும்பத்தில் கருத்து வேறுபாடு காணப்படும். இதனால் மகிழ்ச்சிக் குறைவு நிலவும்.
விருச்சிகம்
இன்று ஏற்றம் இறக்கம் என இரண்டும் கலந்து காணப்படும். நிதானமாக இன்றைய தினத்தைக் கையாள்வதன் மூலம் சாதகமான நாளாக மாற்றலாம். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு காணப்படும்.
தனுசு
எதிர்பாராத பலன்கள் கிடைக்கும். வேலையில் ஆர்வக் குறைவு, கவனக் குறைவு அதிகரிக்கும். இதனால் வேலையை முடிக்க முடியாத சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே மோதல் ஏற்படலாம். நேரடியாக சந்தித்து பேசுவதை தவிர்ப்பது நல்லது.
மகரம்
வெற்றிகரமான நாளாக இருக்கும். எனவே, இன்றைய தினம் முயற்சிகளை மேற்கொள்ளாமல் இருந்துவிட வேண்டாம். வேலையில் சுறுசுறுப்பாக ஈடுபடுவீர்கள். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி நிலவும்.
கும்பம்
அனுகூலமான நாளாக இருக்கும். மனதில் நம்பிக்கையை அதிகரித்துக்கொள்வது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும்.
மீனம்
நிதானமாக செயல்பட வேண்டிய நாள். இன்றைய தினம் சாதகமாக இருக்காது. மனதில் எழும் உணர்ச்சிகளுக்கு இடம் கொடுத்துவிடாமல் நிதானமாக செயல்பட வேண்டும். கணவன் மனைவி இடையே புரிதல் குறையலாம். சிலருக்கு பண வரவு இருக்கும்.