இன்றைய ராசி பலன்கள் (29.7.2021)
மேஷம்
ஆக்கப்பூர்வமான நாளாக இருக்கும். வேலை சூழல் சாதகமாக இருக்கும். குறித்த நேரத்தில் வேலையை முடிப்பீர்கள். குடும்பத்தில் நட்புறவு நிலவும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் அதிகரிக்கும்.
ரிஷபம்
அணுகுமுறையில் மாற்றம் செய்வதன் மூலம் இன்றைய நாளை சாதகமானதாக மாற்றலாம். வேலை சூழல் சுமாராக இருக்கும். உயர் அதிகாரியின் அங்கீகாரத்தைப் பெறுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே பிணைப்பு அதிகரிக்கும்.
மிதுனம்
மற்றவர்களுடன் சிரித்துப் பேசுவதன் மூலம் இன்றைய நாள் சாதகமாக மாற்றலாம். அமைதியாக விட்டுக்கொடுப்பதன் மூலம் பிரச்னையைத் தவிர்க்கலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் இருக்கும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும்.
கடகம்
சுமாரான நாளாக இருக்கும். சாதகமான பலன்கள் கிடைக்க நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். இதனால் வேலைகள் தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. கணவன் மனைவி இடையே மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது.
சிம்மம்
மந்தமான நாளாக இருக்கும். வழக்கமான பணிகளைக் கூடச் செய்ய முடியாமல் திணறும் சூழல் ஏற்படும். திறமைக்கு உரிய மரியாதை கிடைக்காது. சக பணியாளர்களுடன் மோதல் ஏற்படலாம். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் பாதிக்கப்படலாம்.
கன்னி
தன்னம்பிக்கை அதிகரிக்கும். முன்னேற்றத்துக்கான புதிய வாய்ப்புகள், வழிகளைக் கண்டறிவீர்கள். வேலை காரணமாக வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டி வரலாம். கணவன் மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும்.
துலாம்
சாதகமான நாளாக இருக்காது. ஆன்மிகம், பொழுதுபோக்கில் ஈடுபடுவது மனதுக்கு அமைதியைத் தரும். குடும்பத்தில் அமைதியின்மை காணப்படும். கணவன் மனைவி இடையே மன வருத்தம் அதிகரிக்கலாம்.
விருச்சிகம்
சுமாரான நாளாக இருக்கும். இன்றைய நாள் அனுகூலமானதாக அமைய மனதை உற்சாகத்துடன் வைத்திருப்பது அவசியம். குடும்பத்தில் நல்லிணக்கம் பாதிக்கப்படலாம்.
தனுசு
மகிழ்ச்சியான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்கலாம். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும்.
மகரம்
சாதகமான நாளாக இருக்காது. முயற்சிகளில் வெற்றி பெறத் திட்டமிட்டு செயல்பட வேண்டும். குடும்பத்தில் நட்புறவு காணப்படும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் காணப்படும்.
கும்பம்
மன அமைதி பாதிக்கப்படலாம். ஆன்மிக காரியங்களில் ஈடுபடுவது அமைதியைத் தரும். வேலை சூழல் கவலை அளிக்கக் கூடிய வகையில் இருக்கும். குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே மோதல் போக்கு காணப்படலாம்.
மீனம்
ஓரளவு பலன் கிடைக்கும் நாளாக இருக்கும். குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு குறையும். நிதி நிலை சாதகமாக இருக்காது.