இன்றைய ராசி பலன்கள் (28.07.2021)
மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தொழில் மற்றும் வியாபார ரீதியான விஷயங்களில் எதிர்பார்க்காத சில மாற்றங்கள் ஏற்படலாம். குடும்பத்தில் ஒற்றுமை நிலைக்க விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்ப்புகள் எதிர்பார்ப்புக்கு நேர் மாறாக நடக்க வாய்ப்புகள் உண்டு என்பதால் கவனத்துடன் இருப்பது நல்லது. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் அனுகூல பலன் உண்டு.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் இருக்கும் பெரியவர்களை அனுசரணையோடு நடந்து கொள்வது நல்லது. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வாகன ரீதியான விரயங்கள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் அவற்றை பராமரிப்பது நல்லது.
கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தேவையில்லாத சங்கடங்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. உத்யோகத்தில் சிறப்பான பலன்கள் கிடைக்க கவனச்சிதறல் இல்லாமல் வேலையில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய திறமைகளை தீனி போடக் கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன் மனைவிக்கு இடையே புதிய புரிதல் உண்டாகும். சுயதொழில் எதிர்பார்க்கும் அளவிற்கு லாபம் உண்டாகும்.
துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கவலைகள் நீங்கி புது உற்சாகம் தரக்கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. வீண் பழி ஏற்க வாய்ப்புக்கள் இருப்பதாக எச்சரிக்கை தேவை.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புதிய நபர்களின் அறிமுகம் உங்களுக்கு அனுகூலமான பலன்களைக் கொடுக்க இருக்கிறது. கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்து பொறுமை காப்பது நல்லது.
தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செயல்படுவதை தவிர்ப்பது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகம் காணப்படுவதால் டென்ஷனுடன் இருப்பார்கள்.
மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் பந்தம் மென்மேலும் சிறப்பாக அமையும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் தேவையில்லாத சண்டை சச்சரவுகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாய் கூடுமானவரை மௌனம் காப்பது நல்லது.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் பந்தம் பிரச்சனைகளை சந்திக்க நேரலாம் என்பதால் விட்டு கொடுத்து செல்வது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு அதிகரித்து காணப்படும்.
மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தேவையில்லாத அலைச்சல் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் அன்னோன்யம் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் காண்பீர்கள்.