ஆடி மாத ராசி பலன்கள் - சந்திரனின் வீடான கடகத்தில் சஞ்சாரம் செய்கிறார் சூரிய பகவான்!

astrology
By Nandhini Jul 17, 2021 06:01 AM GMT
Report

நவகிரகங்களின் ராஜாவாக திகழும் சூரியன், சந்திரனின் வீடான கடகத்தில் சஞ்சாரம் செய்யக்கூடிய அற்புத மாதம் தான் ஆடி மாதம். சூரியன் ஒருவரின் ஜாதகத்திலும், கோசார ரீதியாகவும் சிறப்பாக அமைந்துவிட்டால் அவர் வணிகம், வேலை, குடும்பம், திருமண வாழ்க்கை என அனைத்திலும் நல்ல பலன்களையும், மாற்றங்களையும் பெற்றிடுவார்.

ஆடி மாத ராசி பலன்கள் - சந்திரனின் வீடான கடகத்தில் சஞ்சாரம் செய்கிறார் சூரிய பகவான்! | Astrology

ஆடி மாத ராசி பலன்களைப் பற்றி பார்ப்போம் - ​

மேஷம்:

சமூகத்தில் உங்களுக்கான மரியாதை அதிகரிக்கும். உங்கள் குடும்பம் தொடர்பாக மனதில் சில விஷயங்களை நினைத்து கொந்தளிப்பு மற்றும் மனக் கலக்கம் இருக்கும். ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. ​

ரிஷபம் :

நீங்கள் வேலை செய்யும் பணியிடத்திலிருந்து நல்ல பலன்களைப் பெறுவீர்கள். எந்த ஒரு பெரிய பணியையும் தொடங்க விரும்பினால் அது சிறப்பாக செய்து முடிப்பதற்கான, நேரம் உங்களுக்கு முற்றிலும் சாதகமாக இருக்கும். ​

மிதுனம் :

நிதி ரீதியாக லாபத்தை தரக்கூடியதாகவும், வேலைவாய்ப்பு தேடுபவர்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. குடும்பத்தில் சில முரண்பாடான நிகழ்வுகள் நடக்கும். அதனால் மன உளைச்சலையும் சந்திக்க நேரிடும். ​

கடகம் :

ராசியில் சூரியன் சஞ்சாரம் நிகழும் இந்த காலத்தில் உங்களுக்கு கலவையான பலன்கள் கிடைக்கும். உங்களின் கெளரவம், சமூக அந்தஸ்து அதிகரிக்கும். குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். அதனால் பிரிவினை நிலை ஏற்படும். ​

சிம்மம் :

சிம்ம ராசி நாதன் சூரியன் கடகத்தில் சஞ்சாரம் செய்வதால் எல்லா விஷயங்களிலும் சற்று கவனமாக இருக்க வேண்டும். சில விஷயங்களால் அலைச்சலும், செலவுகளும் எதிர் கொள்ள வேண்டியிருக்கும். உங்கள் தொழில், வியாபாரத்தில் எச்சரிக்கையாக இருங்கள். ​

கன்னி :

கன்னி ராசியினர் பல நற்பலன்களைப் பெற்றிடுவீர்கள். பண வரவாகும். நிதி ரீதியாக வலுவாக இருப்பீர்கள். சொத்து தொடர்பான தடைகள் நீங்கும். அரசுப் பணிகளில் பெரும் லாபம் இருக்கும். ​

துலாம் :

துலாம் ராசியினர் ஆடி மாதத்தில் நற்பலன்களை அனுபவிப்பர். உங்கள் வாழ்க்கையிலும், வேலை செய்யும் துறையிலும் நிறைய மகிழ்ச்சியையும் முன்னேற்றத்தையும் தரும்.

விருச்சிகம் :

விருச்சிக ராசியினருக்கு பல சுபமான பலன்களைத் தரக்கூடியதாக இருக்கும். உங்கள் வேலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு இருக்கும். குடும்ப சூழ்நிலை இனிமையாக இருக்கும்.

​தனுசு:

தனுசு ராசிக்கு கலவையான பலன்களைத் தரக்கூடிய காலமாக இருக்கும். கவனக்குறைவால் இழப்புகள் ஏற்படலாம். ஆன்மிக நடவடிக்கைகளில் அதிக நாட்டம் இருக்கும்.

​மகரம்:

மகர ராசியினர் கவனமாக இருக்க வேண்டிய மாதம். திருமண வாழ்க்கையில் பிரச்சினைகளை சந்திக்க நேரிடலாம். மாமியாருடன் சர்ச்சையும் அதிகரிக்கக்கூடும். ​

கும்பம் :

உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. ராசிக்கு 6ல் சூரியன் இருப்பதால் திருமண வாழ்க்கை, கூட்டு தொழிலில் சிறிய பிரச்னைகள் ஏற்படும். உங்கள் மனைவி நோய்வாய்ப்படக்கூடும் என்பதால், இந்த காலம் உங்கள் திருமண வாழ்க்கையில் இன்பம் இருக்காது. ​

மீனம்:

சூரியனின் நகர்வு மீன ராசிக்கு நல்ல பலனைத் தருவதாக இருக்கும். கடினமாக உழைப்பதன் மூலம், உங்கள் வேலையில் நீங்கள் நிச்சயமாக முழுமையான வெற்றியைப் பெறுவீர்கள். இந்த நேரத்தில் சந்தையில் இருந்து கடன் வாங்குவதைத் தவிர்க்கவும்.

ஆடி மாத ராசி பலன்கள் - சந்திரனின் வீடான கடகத்தில் சஞ்சாரம் செய்கிறார் சூரிய பகவான்! | Astrology