ஆக்ஸ்போர்ட் தடுப்பூசி திட்டத்துக்கு தடை விதித்தது தென்னாப்பிரிக்கா அரசு
ஆக்ஸ்போர்ட் தடுப்பூசி திட்டத்துக்கு கீழ் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வந்த தடுப்பூசிக்கு முழுமையாக தடை விதித்தது தென்னாபிரிக்கா அரசு. பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகமும் அஸ்ட்ராஸெனகா நிறுவனமும் இணைந்து உருவாக்கியகொரோனா தடுப்பூசிகளை பொதுமக்களுக்குச் செலுத்தும் திட்டத்தை நிறுத்திவைத்திருந்த தென் ஆப்பிரிக்கா, தற்போது அதனை முழுமையாக ரத்து செய்துள்ளது.
தற்போது அந்த நாட்டில் பரவி வரும் புதுவகை கொரோனாவைத் தடுக்கும் திறன் ஆக்ஸ்ஃபோா்டு தடுப்பூசிக்கு இல்லாததால் அந்தத் திட்டம் கைவிடப்படுவதாக சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதற்குப் பதிலாக, இதுவரை அங்கீகரிக்கப்படாத ஜான்ஸன் அண்டு ஜான்ஸன் நிறுவன கரோனா தடுப்பூசியை பொதுமக்களுக்குச் செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. புதுவகைக் கொரோனாவை அந்தத் தடுப்பூசி எந்தளவுக்குத் தடுக்கிறது என்பதைத் தெரிந்துகொள்வதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.