பூமியை நோக்கி வந்த சிறுகோள்... - விண்கலத்தை மோத விட்டு திசை திரும்பிய நாசா சோதனை வெற்றி...!

Viral Video NASA
By Nandhini Sep 27, 2022 07:07 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

ஆபத்தை விளைவிக்க பூமியை நோக்கி வந்த சிறுகோளின் மீது  விண்கலத்தை மோத விட்டு திசை திரும்பிய நாசாவின் சோதனை வெற்றியடைந்துள்ளது. 

விண் கற்களும், சிறு கோள்களும்

விண்வெளியில் பூமிக்கு அருகே பல ஆயிரக்கணக்கான விண்கற்களும், சிறு கோள்களும் இருக்கின்றன. இவை அனைத்தும பூமியின் சுற்று வட்ட பாதைக்குள் நுழையும் அபாயம் இருக்கிறதா என்று நாசா விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

இதனையடுத்து, பூமி அருகே உள்ள சிறு கோள்களின் சுற்றுப் பாதையானது 3 கோடி மைல்களுக்குள் வர சாத்திய கூறுகள் இருப்பதாகவும், அவை பூமியை தாக்கும் அபாயத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.

‘டார்ட்’ சோதனை வெற்றி

இவற்றை முறியடிக்கும் வகையில் நாசா புதிய திட்டத்தை உருவாக்கியது. இத்திட்டத்திற்கு டார்ட் என்று பெயரிடப்பட்டது. இந்நிலையில், பூமியை நோக்கி வரும் டிமார்போஸ் என்ற சிறியகோள் மீது விண்கலனை மோதவிடும் சோதனை முயற்சியில் நாசா விஞ்ஞானிகள் இறங்கினர். இந்த சோதனை திட்டம் இன்று வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது.

இந்திய நேரப்படி இன்று அதிகாலை 4.44மணிக்கு சிறுகோள் மீது வினாடிக்கு 22,500 கிலோமீட்டர் வேகத்தில் சென்று நாசா விண்கலம் மோதியது.

இந்த மோதலின் போது சிறுகோள் அதன் சுற்றுப் பாதையிலிருந்து திசை திரும்பியது. வெற்றிகரமாக நிகழ்த்தபட்ட இந்த சோதனையால் பூமிக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

தற்போது, இந்த அரிய நிகழ்வை செயற்கைகோளில் உள்ள கேமிரா மூலம் நாசா நேரடியாக ஒளிபரப்பியுள்ளது.

தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. விஞ்ஞானிகளின் இந்த முயற்சிக்கு உலக மக்கள் பலர் தங்களது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். 

asteroid-nasa-viral-video