பிரபலங்கள் மறைவுக்கு சட்டப்பேரவையில் இரங்கல்!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடிகர் விவேக்,மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் எழுத்தாளர் கி.ரா. உள்ளிட்ட பிரபலங்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

தமிழ்நாடு சட்டப்பேரவைக் காலை கூடியவுடன் முதல் நிகழ்வாக, மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. பாண்டுரங்கன், முஹம்மத் ஜான், பாப்பாசுந்தரம், முனைவர் அரங்கநாயகம், விஜயன், வி.எஸ்.ராஜி, ராஜேந்திரன், சகாதேவன், சுலோசனா, கே.பி.ராஜு, கி.ராமச்சந்திரன், எம்.அன்பழகன், ஜெ.பன்னீர்செல்வம் ஆகியோரின் மறைவுக்கு சபாநாயகர் அப்பாவு இரங்கல் குறிப்பு வாசித்தார்.
அதனைத்தொடர்ந்து பிரபல திரைப்பட நடிகரும், சமூக ஆர்வலருமான விவேக், எழுத்தாளர் கி.ராஜநாராயணன், சுதந்திர போராட்ட வீரர் துளசி அய்யா வாண்டையார்,
இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்பினர் காளியண்ணன், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன் ஆகியோரின்
மறைவுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
எப்போதுமே மகிழ்ச்சியாக இருக்கும் அதிர்ஷ்டம் கொண்ட டாப் 3 ராசியினர்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
அம்மாவான பின்னும் குறையாத இளமை... sleeveless ஜாக்கெட்டுடன் ரசிகர்களை கிறங்கடிக்கும் VJ அஞ்சனா! Manithan