அன்பு மலர்களே.. நம்பி இருங்களே.. சட்டப்பேரவையில் ஒன்றாக அமர்ந்திருந்த ஈபிஎஸ், ஓபிஎஸ்
சட்டப்பேரவையில் ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் அருகருகே அமர்ந்துள்ளனர். 2023ம் ஆண்டின் முதல் தமிழக சட்டப்பேரவை கூட்டம் சென்னை, தலைமை செயலகத்தில் அமைந்துள்ள சட்டப்பேரவை வளாகத்தில் தொடங்கியது.
ஆளுநருக்கு எதிர்ப்பு
சட்டப்பேரவை கூட்டத்தொடரின் தொடக்கத்தில் தமிழ்த் தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. ஆளுநர் உரையின் தொடக்கத்தின் போது திமுக கூட்டணி கட்சியினர் ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து முழங்கமிட்டதுடன், ஆளுநர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். காங்கிரஸ், மதிமுக, விசிக, சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
இணைந்த கைகள்
இந்த நிலையில், அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், இப்பிரச்சனை தொடர்ந்து நடையபேரு வருகிறது. இதனால், ஈபிஎஸ், ஓபிஎஸ் தரப்பில் மாறி மாறி விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர். இந்த நிலையில், சட்டப்பேரவையில் ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் அருகருகே அமர்ந்துள்ளது தற்போது பேசுபொருளாகியுள்ளது.