தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தமிழ்நாடு வரலாற்றில் கரும்புள்ளி : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

M K Stalin DMK
By Irumporai Oct 19, 2022 09:23 AM GMT
Report

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசினர் தனித் தீர்மானம் கொண்டு வந்தார்.

தூத்துக்குடி சம்பவம் கரும்புள்ளி

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தனித்தீர்மானம் மீது பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிய போது, அதிமுக ஆட்சியில் நடந்த தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தமிழ்நாடு வரலாற்றில் கரும்புள்ளி.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தமிழ்நாடு வரலாற்றில் கரும்புள்ளி : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் | Assembly Regarding The Thoothukudi Firing Incident

இப்போது நினைத்தாலும் உடல் நடுகுகிறது. அதிமுக அரசு இந்த போராட்டத்தை சரியாக கையாளவில்லை.. அமைதி வழியில் நடந்த போராட்டத்தை அதிமுக அரசு சரியாக கையாளவில்லை.

5 லட்சம் நிவாரணம்

போராட்டக்காரர்களுடன் பேசவும் இல்லை. துப்பாக்கி சூடு சம்பவத்தில் தொடர்புடைய முன்னாள் ஆட்சியர் அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்   

குற்றவாளிகள் கூண்டில் ஏற்றப்படுவார்கள். அதிமுக அரசின் அலட்சியம் காரணமாகத்தான் இத்தனை பேர் உயிரிழந்திருக்கின்றனர். உண்மைக்கு மாறான தகவலை எடப்பாடி பழனிசாமி தெரிவித்து இருக்கிறார்.

துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு தகுதிக்கேற்ப வேலையை அதிமுக அரசு வழங்கவில்லை. தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் இறந்த 13 பேரின் குடும்பத்தினருக்கு கூடுதலாக 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்.