சட்டமன்ற நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பு : உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல்
சட்டமன்ற நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்ப செய்ய கோரிய வழக்கில் பேரவை செயலாளர் பதில் மனு தாக்கல் செய்தார்.
சட்டமன்ற நிகழ்வுகள்
தமிழகத்தில் சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டமன்ற நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்ப செய்ய கோரி தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்ளிட்டோர் தாக்கல் செய்த வழக்கில் தமிழக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
பதில் மனு
இந்த வழக்கில் தன்னையும் இணைத்துக்கொள்ள அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி.
இதற்கு , சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில், சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கேள்வி நேரம், கவன ஈர்ப்பு தீர்மானங்கள், முக்கிய தீர்மானங்களின் விவாதங்கள் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றன எனவும் கூறியுள்ளார்.