சட்டமன்ற பொதுத் தேர்தல் - வாக்குப்பதிவில் தமிழ்நாட்டை முந்திச் சென்ற புதுச்சேரி
தமிழ்நாட்டுடன் சேர்த்து புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்களுக்கும் சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இன்று மட்டும் மொத்தமாக 475 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள் உட்பட பலர் ஆர்வத்துடன் வாக்களித்து வருகிறார்கள். வாக்காளர்கள் மாஸ்க் அணிந்து கொரோனா தடுப்பு நடைமுறைகளுடன் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். 2016ஆம் ஆண்டை விட தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு மிகவும் குறைந்திருக்கிறது.
குறிப்பாக சென்னையில் உள்ள வாக்காளர்கள் சுணக்கம் காட்டி வருகிறார்கள். அதிகமாக வாக்குகள் திண்டுக்கல் மாவட்டத்தில் தான் பதிவாகியுள்ளன. தமிழ்நாட்டில் மொத்தமாக 13.80% வாக்குகள் பதிவாகி இருக்கிறது.

ஆனால் புதுச்சேரியில் இன்று காலை 11 மணி நிலவரப்படி 20.07 சதவீத வாக்குகள் பதிவாகி இருக்கின்றன. புதுச்சேரியில் 30 தொகுதிகளுக்கு 1,558 வாக்குச்சாவடிகளில் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளுடன் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.