சட்டமன்ற தேர்தல்: காவல் துறையினருக்கான தபால் வாக்குப்பதிவு தொடங்கியது
police
vote
assembly
postel
By Jon
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடியில் காவல் துறையினருக்கான தபால் வாக்குப் பதிவு இன்று காலை தொடங்கியது. தூத்துக்குடியில் சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவல் துறையினர், காமராஜ் கல்லூரியில் இன்று தபால் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.
இதுபோல் ஓட்டப்பிடாரம் தொகுதியில் புதியம்புத்தூரில் உள்ள மேல்நிலைப் பள்ளியிலும், விளாத்திகுளம் தொகுதிக்கான வாக்குப்பதிவு எட்டயபுரத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் நடைபெறுகிறது. இன்று காலை 10 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. மாலை 6மணி வரை வாக்குப் பதிவு நடைபெறுகிறது. தபால் வாக்குப் பதிவை மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் அலுவலர் செந்தில் ராஜ் ஆய்வு செய்தார்.