180 சிறுமிகளை மிரட்டி தகாததொழிலில் ஈடுபடவைத்த இளைஞர் கைது
மகாராஷ்டிர மாநிலம் அமராவதி மாவட்டம் பரத்வாடா நகரை சேர்ந்த இளைஞர் முகமது அயாஸ்.
இவர் சமூக வலைதளங்கள் மூலம் இளம்பெண்கள் மற்றும் 18 வயதுக்குட்பட்ட சிறுமிகளை தொடர்புகொண்டு, ஆசை வார்த்தைகளால் அவர்களை ஏமாற்றியுள்ளார்.
பின்னர் அவர்களை தனியாக அழைத்துச் சென்று அத்துமீறலில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவங்களை அவர் வீடியோவாக பதிவு செய்து, அவர்களை மிரட்டி தகாததொழிலில் ஈடுபட கட்டாயப்படுத்தியுள்ளார்.

மேலும், இவர் சில வீடியோக்களை இணையத்திலும் பதிவேற்றியுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து மாநிலங்களவை எம்.பி. அனில் போண்டே அளித்த புகாரின் பேரில் போலீசார் அவரை கைது செய்தனர்.
முகமது அயாஸின் செல்போனில் சுமார் 180 சிறுமிகளின் 350க்கும் மேற்பட்ட வீடியோக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட அவரை போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையில், பரத்வாடா பகுதியில் உள்ள அவரது வீட்டில் சட்டவிரோத ஆக்கிரமிப்பு இருந்ததாக கூறி அதன் ஒரு பகுதியை மாநகராட்சி அதிகாரிகள் இடித்துள்ளனர்.