இந்தியர்களை பார்த்தால் வெறுப்பாக இருக்கிறது...பெண்கள் மீது தாக்குதல் - அமெரிக்க பெண் கைது

United States of America
By Thahir Aug 29, 2022 06:31 AM GMT
Report

கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு உணவகத்தில் சாப்பிட்டு வந்த இந்திய பெண்களை திட்டித் தீர்த்து அவர்களை தாக்கிய அமெரிக்கா பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்திய பெண்கள் மீது இனவெறி தாக்குதல்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டல்லாஸ் நகரில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 4 பெண்கள் 4 பேர் உணவகம் ஒன்றில் சாப்பிட்டுவிட்டு அங்குள்ள வாகன நிறுத்தத்தில் உள்ள தங்கள் காரை எடுக்க வந்ததாக கூறப்படுகிறது.

அந்த நேரத்தில் அங்கு வந்த மெக்சிகன் அமெரிக்க எஸ்மரால்டா என்ற அமெரிக்க பெண் இந்திய பெண்களை வழிமறித்து ஆவேசமாக தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

இந்தியர்களை பார்த்தால் வெறுப்பாக இருக்கிறது...பெண்கள் மீது தாக்குதல் - அமெரிக்க பெண் கைது | Assault On Women American Woman Arrested

அப்போது அந்த அமெரிக்க பெண் இந்திய பெண்களை பார்த்து நான் இந்தியர்களை வெறுக்கிறேன். இந்தியர்கள் சிறந்த வாழ்க்கைக்காக அமெரிக்காவிற்கு வருகிறார்கள்.

நான் எங்கு சென்றாலும் இந்தியர்கள் நீங்கள் இருக்கிறீர்கள், இந்தியாவில் வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருந்தால், நீங்கள் ஏன் இங்கே இருக்கிறீர்கள்?

அமெரிக்கா பெண் கைது 

இந்தியாவுக்கு திரும்பிச் செல்லுங்கள் என் ஆவேசமாக கூறி சரமாரியாக தாக்க தொடங்கினார். இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரானதை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் டெக்சாஸ் சட்டப்படி ஒரு வெறுப்பு குற்றமாகும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.