ஆட்டம் காட்டும் ஆட்கொல்லி புலி..தேடுதல் வேட்டையை துரிதப்படுத்திய வனத்துறை

Tiger Assassin Forest Department Search
By Thahir Oct 03, 2021 04:53 AM GMT
Report

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே மசினகுடியில் பொதுமக்களை அச்சுறுத்தும் புலியைப் பிடிக்கும் பணி இன்றும் தொடர்கிறது .

மசினகுடி அருகே , கால்நடைகள் மற்றும் 4 மனிதர்களை T23 என பெயரிடப்பட்ட புலி கொன்றதை அடுத்து மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

ஆட்டம் காட்டும் ஆட்கொல்லி புலி..தேடுதல் வேட்டையை துரிதப்படுத்திய வனத்துறை | Assassin Tiger Forest Department Search

இதன் காரணமாக புலியை சுட்டுப்பிடிக்கும் நடவடிக்கையில் வனத்துறை இறங்கியுள்ளது. சிங்காரா வனப்பகுதிக்குள் அதிரடிப் படையினருடன் நுழைந்த வனத்துறையினர் புலியை பிடிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

80-க்கும் மேற்பட்ட வேட்டை தடுப்பு காவலர்கள், கால்நடை மருத்துவ குழு, தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளாவை சேர்ந்த வனத்துறை ஊழியர்களும் புலியை பிடிக்கும் முயற்சி ஈடுபட்டனர்.

தேசிய புலிகள் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி மாலை 6 மணிக்கு மேல் வன விலங்குகளை பிடிக்கக் கூடாது என தடை இருப்பதால்,

புலியை பிடிக்கும் பணி நேற்று மாலை 6 மணிக்கு மேல் நிறுத்தப்பட்டது. இதனையடுத்து, இன்று காலை முதல் மீண்டும் புலியை பிடிக்கும் பணி தொடங்கியுள்ளது.

புலி நடமாட்டத்தால் வீடுகளிலேயே முடங்கியுள்ள மக்கள், விரைந்து புலியை பிடிக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.