25வது தடவையாக இளைஞருடன் ஓடிப்போன பெண்!!! ஆனாலும் மனைவியை நேசிக்கும் கணவன்- வித்தியாசமான உண்மை கதை
இந்தியாவில் 25வது தடவையாக மனைவி ஓடிப்போனாலும், அவளை நேசிப்பதாக கூறுகிறார் Mafizuddin என்ற கணவர்.
அஸ்ஸாம் மாநிலத்தின் Dhing Lahkar கிராமத்தை சேர்ந்தவர் Mafizuddin, இவரது மனைவி Nisha(பெயர் மாற்றப்பட்டுள்ளது), இவர்களுக்கு 6 வயதில் மகளும், 3 மற்றும் 3 மாத ஆண் குழந்தையும் இருக்கிறது.
கடந்த 10 ஆண்டுகளில் 25 வெவ்வேறு ஆண்களுடன் ஓடிப்போயுள்ளாராம் Nisha, ஒவ்வொரு தடவையும் தன் மனைவி திரும்ப வரும் போது ஏற்றுக்கொள்கிறார் Mafizuddin.
இதுகுறித்து அவர் கூறுகையில், சில நேரங்களில் சொந்தக்காரர்கள் வீட்டுக்கு சென்றதாக கூறுவாள், சில நேரங்களில் தூரத்து உறவினர்களின் வீட்டில் தங்கியதாக கூறுவாள்.
எங்களுக்கு மூன்று குழந்தைகள் இருக்கிறது, குழந்தைகளுக்காக நான் அவளை ஏற்றுக்கொள்வேன், ஒவ்வொரு தடவை வரும்போது இனி இதுபோல் நடக்காது என சத்தியம் செய்வாள்.
ஆனாலும் சில மாதங்களில் மறுபடியும் சென்றுவிடுவாள், இப்போது கூட கடந்த 4ம் தேதி குழந்தையை பக்கத்து வீட்டில் விட்டுவிட்டு ஆடுகளுக்கு உணவு சேகரிக்க செல்வதாக கூறியிருக்கிறாள்.
என் வீட்டில் இருந்த 22,000 ஆயிரம் ரூபாய் பணத்தையும், சில பொருட்களையும் காணவில்லை, எப்போது மீண்டும் வருவாள் என்று கூட தெரியவில்லை என கவலையுடன் தெரிவித்துள்ளார்.
எது எப்படி இருந்தாலும் என் குழந்தைகளுக்காக நான் அவளை ஏற்றுக்கொள்வேன், அவள் இல்லையென்றால் என் குழந்தைகளை யார் பார்த்துக் கொள்வது? எனவும் தெரிவித்துள்ளார்.