சுட்டி குழந்தைப் போல் ஊஞ்சலில் விளையாடிய யானை - வைரலாகும் வீடியோ
Viral Video
Assam
Elephant
By Nandhini
யானை ஒன்று சுட்டி குழந்தைப் போல் ஊஞ்சலில் விளையாடிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
குழந்தைப் போல் விளையாடிய யானை
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், அசாம் மாநிலத்தில், குவாஹாட்டியில் உள்ள ராணுவ கான்ட் பகுதியில் குழந்தைகள் பூங்காவிற்குள் ஒரு யானை நுழைந்தது.
அந்த யானை அங்கிருந்த குழந்தைகள் விளையாடும் ஊஞ்சலில் சுட்டி குழந்தைப் போல் விளையாடியது. இதை அங்கிருந்தவர்கள் சிலர் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டனர்.
தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

And same time free #Elephant in #Assam pic.twitter.com/bnVf5s0MQ3
— YagyaSenl Yuliya (@Yugyasnl_YaIiya) October 16, 2022