தலைவிரித்தாடும் குடியேற்றம், குழந்தை திருமண கொடுமைகள் - அல்லாடும் அசாம்

BJP Assam Marriage
By Sumathi Feb 16, 2023 08:09 AM GMT
Report

அசாம் மாநிலம், 1826 ஆம் ஆண்டு ஆங்கிலேயரின் யாண்டபோ உடன்படிக்கையால் இந்தியாவின் அங்கமானது. வடகிழக்கு இந்தியாவில் அமைந்துள்ளது. குவகாத்தி இம்மாநிலத்தின் முக்கிய நகரம். அசாமிய மொழி, போடோ மொழி மற்றும் வங்காள மொழி ஆகியன அலுவல்முறை மொழியாக பார்க்கப்படுகிறது.

அசாம்

தலைவிரித்தாடும் குடியேற்றம், குழந்தை திருமண கொடுமைகள் - அல்லாடும் அசாம் | Assam Politics In Tamil

தேயிலை, பெட்ரோலியம், பட்டு ஆகியவற்றின் உற்பத்தியில் சிறந்து விளங்குகிறது. உலகில் வேறெங்கிலும் காண கிடைக்காத பல அரிய விலங்கினங்களும், தாவர வகைகளும் அசாம் காடுகளில் காணப்படுகின்றன. 2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி அசாம் மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 31,205,576 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 85.90% மக்களும்; நகர்புறங்களில் 4.10% மக்களும் வாழ்கின்றனர்.

கோபிநாத் பர்தலை

அசாமின் 1938ஆம் ஆண்டில் முதலாவது முதலமைச்சராகப் பணியாற்றியவர் கோபிநாத் பர்தலை. இந்திய விடுதலை இயக்கத்தில் பெரும் பங்காற்றியவர். அரசியல் கோட்பாடாக காந்தியின் வன்முறை தவிர்த்த வழியை ஏற்றுக்கொண்டவர்.

தலைவிரித்தாடும் குடியேற்றம், குழந்தை திருமண கொடுமைகள் - அல்லாடும் அசாம் | Assam Politics In Tamil

மகாத்மா காந்தியின் ஆணைப்படி 1940ஆம் ஆண்டில் தமது பதவியை துறந்தார். 1946ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்களில் மீண்டும் வெற்றி பெற்று முதலமைச்சராக பொறுப்பேற்றார்.

விஷ்ணுராம் மேதி

அதன்பின், விஷ்ணுராம் இந்திய தேசிய காங்கிரசில் 1920களில் இணைந்தார். ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றார். 1926இல் பாண்டுவில் நடந்த இந்திய தேசிய காங்கிரசின் மாநாட்டு வரவேற்புக் குழுவில் இணைச் செயலாளராக பணியாற்றினார். 1930இல் அசாமிய மாநில காங்கிரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தலைவிரித்தாடும் குடியேற்றம், குழந்தை திருமண கொடுமைகள் - அல்லாடும் அசாம் | Assam Politics In Tamil

1935இல் மாநில சுயாட்சி வழங்கப்பட்டபோது கோபிநாத் போர்டோலாய் அமைச்சரவையில் விஷ்ணுராம் அமைச்சராகப் பணியாற்றினார். 1950இல் அசாமின் முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1957 வரை இப்பதவியில் நீடித்தார். 1958 முதல் 1964 வரை சென்னை மாநில ஆளுநராக பணியாற்றினார்.

பிரபுல்ல குமார் மகந்தா

பிரபுல்ல குமார் மகந்தா அசாம் இயக்கித்தின் தலைவரும், இந்தியாவின் தலைசிறந்த அரசியல் தலைவரும் ஆவார். அசாமில் இரு முறை முதலமைச்சராக, (1985-1990) மற்றும் (1996-2001), மேலும் நாட்டிலேயே இளவயதில் முதலமைச்சர் பொறுப்பேற்ற முதல் தலைவர்.

தலைவிரித்தாடும் குடியேற்றம், குழந்தை திருமண கொடுமைகள் - அல்லாடும் அசாம் | Assam Politics In Tamil

மாணவர் அணியின் முன்னாள் தலைவராக 1979 முதல் 1985 வரையிலுள்ள காலத்தில் பொறுப்பிலிருந்தவர்.

 தருண் கோகய்

இவரைத் தொடர்ந்து, தருண் கோகய் 2001 அன்று அசாமின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். 2006ஆம் ஆண்டு மீண்டும் தேர்தல்களில் வென்று இரண்டாம் முறையாக முதலமைச்சராகப் பணியாற்றினார். 2011 ஏப்ரல் மாதம் நடந்த பொதுத்தேர்தல்களில் வெற்றிபெற்று மீண்டும் மூன்றாம் முறையாக முதலமைச்சராக மே, 2011 முதல் 2016 வரை பணியாற்றினார்.

தலைவிரித்தாடும் குடியேற்றம், குழந்தை திருமண கொடுமைகள் - அல்லாடும் அசாம் | Assam Politics In Tamil

2016 ஆண்டு அசாமில் பாரதீய ஜனதா கட்சி வெற்றி பெற்று சர்பானந்த சோனாவால் முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கொரோனா தொற்றின் காரணமாக ஏற்பட்ட பல்வேறு உள்ளுறுப்புகள் செயலிழப்பு காரணமாக கௌகாத்தி மருத்துவக் கல்லூரி அரசு மருத்துவமனையில் 23 நவம்பர் 2020 அன்று உயிரிழந்தார்.

சர்பானந்த சோனாவால்

2011க்குப் பின்னர் அசாம் கன பரிசத் கட்சியிலிருந்து விலகிய சர்பானந்த சோனாவால், பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். 16ஆவது இந்திய நாடாளுமன்ற மக்களைவைக்கு, அசாமின் லக்கீம்பூர் தொகுதியிலிருந்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்டு வென்றவர். மேலும் அசாம் மாநில பாரதிய ஜனதா கட்சித் தலைவராக இருந்தவர். நரேந்திர மோடி அமைச்சரவையில் இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்திலும், தொழில் முனைவோர் மற்று திறன் மேம்பாட்டு அமைச்சகத்திலும்,

தலைவிரித்தாடும் குடியேற்றம், குழந்தை திருமண கொடுமைகள் - அல்லாடும் அசாம் | Assam Politics In Tamil

தனி பொறுப்புடன் கூடிய ராஜாங்க அமைச்சராகப் பொறுப்பு வகித்தார். 2016-இல் அசாம் சட்டமன்றத் தேர்தலில், பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக, மஜௌலி தொகுதியிலிருந்து போட்டியிட்டு வென்று, அசாம் மாநிலத்தின் 14ஆவது முதல்வராகப் பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.

ஹிமாந்த பிஸ்வாஸ் சர்மா

தற்போது, ஹிமாந்த பிஸ்வாஸ் சர்மா 2014 அன்று இந்திய தேசிய காங்கிரசு கட்சியிலிருந்து விலகிய சர்மா, 23 ஆகஸ்டு 2015-இல் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். 2016 அசாம் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை தொகுதிகளில் வென்ற பாரதிய ஜனதா கட்சி அரசின் நிதி, திட்டம் & மேம்பாடு, சுகாதாரம் மற்றும் குடும்பநலம், கல்வி & பொதுப்பணித் துறை அமைச்சராக பதவி வகித்தார்.

தலைவிரித்தாடும் குடியேற்றம், குழந்தை திருமண கொடுமைகள் - அல்லாடும் அசாம் | Assam Politics In Tamil

தொடர்ந்து, ஜலுக்பாரி சட்டமன்றத் தொகுதியிலிருந்து ஐந்தாம் முறையாக வென்று சட்ட உறுப்பினரானார். 2021, மே 15-வது அசாம் முதலமைச்சராக பதவியேற்றார்.

குழந்தை திருமணம்

இங்கு சமீபத்தில் சராசரியாக 31 சதவிகித பெண் குழந்தைகள், 18 வயதுக்கு முன்பே திருமணம் செய்து வைக்கப்படுவதாக, சுகாதாரத்துறை நடத்திய ஆய்வில் தெரிய வந்தது. மேலும், தாய் மற்றும் சிசு இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது. மாநிலம் முழுவதும் இந்த விவகாரம் தொடர்பாக 2 நாளில் 2258 பேர் கைது செய்யப்பட்டனர்.

தலைவிரித்தாடும் குடியேற்றம், குழந்தை திருமண கொடுமைகள் - அல்லாடும் அசாம் | Assam Politics In Tamil

தொடர்ந்து ஒரு நிகழ்ச்சியில், "பெண்கள் தாயாவதற்கு 22 முதல் 30 வயது தான் சிறந்த காலம். இதைப் பெண்கள் பின்பற்றினால் தாய் மற்றும் குழந்தை இருவருக்கும் நல்லது" என மாநில முதலமைச்சர் பேசினார். இதற்கு ஒரு பெண்ணுக்கு தன் உடலின் மீது உரிமை உண்டு, அதை முடிவெடுக்க அவளுக்கு முழு உரிமை உண்டு. அதாவது, அவர் எப்போது தாயாக வேண்டும், எப்போது வரை தள்ளிப்போடலாம் என்பதை அவரே முடிவு செய்வார் என்னும் வாதம் எழும்பியது. பெண்களின் விருப்பத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என விமர்சனங்களும் தலை தூக்கியது.

 5 தலைநகரங்கள் 

இந்நிலையில், மண்டல வாரியாக 5 தலைநகரங்கள் வேண்டும் என்று கோரியுள்ள சர்மா, அவற்றில் ஒன்று அசாமில் வேண்டும் என்பதற்கும் மறைமுகமாக அழுத்தம் தந்துள்ளார். இந்த கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியது. அசாமுக்கு வெளியேயும் பாஜக முகாமின் அதிகார மையங்களில் ஒன்றாக வளர்ந்து வரும் சர்மாவின் இந்தக் குரல் பாஜகவின் உள்ளார்ந்த குரலாகவும் பார்க்கப்படுகிறது.

குடியேற்ற விவகாரம் 

இதற்கிடையில், சுதந்திரம் பெற்றதிலிருந்து குடியேற்ற விவகாரம் அசாமில் தலையெடுத்தது. பிரிவினைக்குப் பிறகு அப்போதைய கிழக்குப் பாகிஸ்தானிலிருந்து அகதிகள் அசாமுக்குள் குடியேறத் தொடங்கினர். 2019 நிலவரப்படி தேசியக் குடிமக்கள் பதிவேடு இறுதி செய்யப்பட்டு சுமார் 19 லட்சம் பேர் நீக்கப்பட்டனர்.

தலைவிரித்தாடும் குடியேற்றம், குழந்தை திருமண கொடுமைகள் - அல்லாடும் அசாம் | Assam Politics In Tamil

நீக்கப்பட்டவர்கள் தங்கள் குடியுரிமையை நிரூபித்தால் மீண்டும் பட்டியலில் இணைக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது. நாங்கள் இந்தியர்கள் தான். எத்தனை முறை நாங்கள் திரும்ப திரும்ப இதனை நிரூபிக்க இயலும்.

ஏற்கனவே பட்டியலில் இடம் பெற்றவர்களின் நிலை இப்படி இருக்கிறது என்றால் பட்டியலில் இடம் பெறாதவர்கள் நிலை இன்னும் மோசமாக இருப்பதாக மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இப்படி, குடியேறுவதிலும் பெண் பாதுகாப்பிலும் அவதியுறும் மக்களுக்கு அரணாக அரசு இருக்குமா என கேள்விகள் எழாமல் இல்லை.