மெத்தையில் அயர்ந்து தூங்கிய நபர்... - வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வீடியோ காட்சி வைரல்

Viral Video Assam
By Nandhini May 20, 2022 11:55 AM GMT
Report

அசாமில் தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. பெய்து வரும் கனமழையால், நிலச்சரிவு வெள்ளம் ஏற்பட்டு பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள்.

நிலச்சரிவு காரணமாகவும், வெள்ள பாதிப்பு காரணமாகவும் வீடுகள் பலத்த சேதமடைந்துள்ளது.

அத்துடன் வெள்ள நீரில் ஆற்றங்கரையோரம் உள்ள வீடுகள் அடித்துச் செல்லப்படும் காட்சிகள் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதனால் அசாமில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தொடர்ந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், கனமழையில் ஒருவர் மெத்தையில் உறங்கியவாறே வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் வீடியோ வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ -