கொட்டித் தீர்க்கும் கனமழை - அசாமில் 222 கிராமங்கள் மழைநீரில் மூழ்கின - பரிதவிக்கும் மக்கள்

Assam
By Nandhini May 16, 2022 05:35 AM GMT
Report

கடந்த சில நாட்களாக மேகாலயா மற்றும் அருணாசல பிரதேசத்தில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால், அந்த மாநிலங்களில் ஆறுகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு கரைபுரண்டோடுகிறது.

இதனையடுத்து, கொபிலி ஆற்றில் அபாய அளவை கடந்து வெள்ளநீர் சீரிப்பாய்ந்து ஓடுகிறது. இந்த வெள்ள பெருக்கால் கச்சார், திமஜி, ஹொஜய், கர்பி அங்லோங் மேற்கு, நகாவன் மற்றும் கம்ரூப் ஆகிய 6 மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றன.

தொடர் மழை காரணமாக தீம ஹசாவோ மாவட்டத்தின் 12 கிராமங்களில் நில சரிவுகள் ஏற்பட்டிருக்கிறது. 1,0321 ஹெக்டேர் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

கனமழையால் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி தீவு போல காட்சியளிக்கிறது. அசாமில் கொட்டித் தீர்த்த மழையால் 222 கிராமங்ளில் உள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. 

கொட்டித் தீர்க்கும் கனமழை - அசாமில் 222 கிராமங்கள் மழைநீரில் மூழ்கின - பரிதவிக்கும் மக்கள் | Assam Heavy Rain