லாரியில் சுமார் 1 கோடி ரூபாய் மதிப்பு கொண்ட கஞ்சா கடத்தல் - 2 பேர் கைது

Assam
By Nandhini Jan 21, 2023 05:33 AM GMT
Report

அசாமில் சுமார் 1 கோடி ரூபாய் மதிப்பு கொண்ட கஞ்சா கடத்தப்பட்ட சம்பவத்தில் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கஞ்சா கடத்தல்

அசாம், கவுகாத்தியின் புறநகர் பகுதியில் உள்ள ஜோராபத் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த லாரியை நிறுத்திய போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, அந்த லாரியில் சுமார் 101 கிலோ கஞ்சா கடத்தப்பட்டது கண்டுப்பிடிக்கப்பட்டது. மேலும், திரிபுராவிலிருந்து வட இந்தியாவிற்கு கஞ்சா கடத்தப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.

கடத்தப்பட்ட கஞ்சாவின் மதிப்பு சுமார் 1 கோடி ரூபாய் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து, இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் 2 பேரை கைது செய்துள்ளனர்.   

assam-guwahati-101-kg-trafficking-in-cannabis