அட்ரஸ் கேட்க வந்து பெண்ணின் மார்பை தொட்ட இளைஞர் - இளம்பெண் கொடுத்த பதிலடி! வைரல் வீடியோ!
அசாமில் சாலையில் சென்ற பெண்ணை சீண்டிய இளைஞரை தள்ளிவிட்ட இளம்பெண்ணின் செயலை அனைவரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
அசாமில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணியளவில் சாலையில் நடந்து கொண்டிருந்த பாவனா காஷ்யப் என்ற பெண்ணிடம் எதிரே இருச்சக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் விலாசம் கேட்டுள்ளார்.
அப்போது அந்த இளைஞர் பாவனாவின் மார்பகத்தை சீண்டிவிட்டு தப்பி செல்ல முயன்றுள்ளார். இதில் ஆத்திரமடைந்த பாவனா, அந்த நபரின் ஸ்கூட்டரை வேகமாக இழுத்து, அருகே இருந்த சாக்கடை கால்வாயில் தள்ளிவிட்டுள்ளார்.
அதனால் அந்த நபரால் அங்கிருந்து தப்பியோட முடியவில்லை. இதனை தொடர்ந்து அங்கிருந்தவர்கள் பாவனாவுக்கு துணையாக இருக்க, நடந்த சம்பவத்தை ஒருவர் வீடியோவாக எடுக்கத் தொடங்கினார்.
தொடர்ந்து அந்த வீடியோவில் தனக்கு நடைபெற்ற இந்த கொடுமையை விளக்கி பெண்கள் துணிவுடன் செயல்பட வேண்டும் என வலியுறுத்தி, அத்துமீறி நடந்து கொண்ட நபரை வளைத்துப்பிடித்த வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.