இனி பொது இடங்களில் மாட்டிறைச்சி விற்பனை செய்ய தடை - இன்று முதல் அமல்!
பொது இடங்களில் மாட்டிறைச்சி விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாஜக ஆட்சி
அசாமில் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அவரது தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
அதில் மாட்டிறைச்சி உண்பது தொடர்பாக தற்போதுள்ள சட்டத்தில் திருத்தம் செய்து புதிய விதிகளை இணைக்க முடிவெடுக்கப்பட்டது. அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர்,
மாட்டிறைச்சிக்கு தடை
மாநிலத்தில் உள்ள உணவகங்கள் மற்றும் பொது இடங்களில் மாட்டிறைச்சி உண்பதற்கும் பரிமாறுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டுப்பாடு மாநிலம் முழுவதுமுள்ள உணவகம், விடுதி மற்றும் உள்ளூர் கொண்டாட்ட நிகழ்வு உள்ளிட்ட அனைத்துக்கும் பொருந்தும்.
இந்த தடை உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது. அசாம் கால்நடைப் பாதுகாப்புச் சட்டம் 2021இன் படி இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனை மீறினால், மூன்று முதல் எட்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் 5 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.