அசாமில் வாகனம் டிரக் மீது மோதி பயங்கர விபத்து - 3 பேர் சம்பவ இடத்தில் பலி...!

Assam Viral Photos Accident
By Nandhini Jan 16, 2023 01:45 PM GMT
Report

அசாமில் வாகனம் டிரக் மீது மோதி பயங்கர விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அசாமில் பயங்கர விபத்து

அசாம், மோரிகான் மாவட்டத்தில் உள்ள தரம்துல் பகுதியில் NH-37ல் யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற வாகனம் ஒன்று எதிரே வந்த டிரக் மீது மோதியது. இந்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலர் காயமடைந்துள்ளனர்.

இது குறித்து போலீசாருக்கு உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில், மகர சங்கராந்தி அன்று லோஹித் நதியில் புனித நீராடிவிட்டு பக்தர்கள் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் இது தொடர்பாக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். 

assam-accident-3-people-dead