அசாமில் 2 பயங்கரவாதிகள் சுட்டு கொலை - சடலத்தை ஏறி மிதிக்கும் ஒளிப்பதிவாளர், பதைபதைக்கும் காட்சி

video assam 2 terrorist killed Sri Himanta Biswa Sarma assam cm
By Anupriyamkumaresan Sep 23, 2021 12:39 PM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in குற்றம்
Report

அசாம் மாநிலத்தில் சட்டவிரோத நிலத்தரகு நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக 453 நிலத்தரகர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அசாமில், ஐக்கிய போடோலாந்து விடுதலை முன்னணி என்ற புதிய பயங்கரவாத இயக்கம் கடந்த வாரம் தொடங்கப்பட்டது. போடோ இனத்தினருக்கு தனி மாநிலம் அமைப்பதே தங்களது லட்சியம் என்று அந்த இயக்கம் அறிவித்தது.

அசாமில் 2 பயங்கரவாதிகள் சுட்டு கொலை - சடலத்தை ஏறி மிதிக்கும் ஒளிப்பதிவாளர், பதைபதைக்கும் காட்சி | Assam 2 Terrorists Killed Fear Video

இந்தநிலையில், அசாம் மாநிலம் கோக்ரஜார் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அந்த புதிய பயங்கரவாத இயக்கத்தினருக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை ஏற்பட்டது. இதில், 2 பயங்கரவாதிகள் கொடூரமாக சுட்டுக்கொல்பட்டனர். மேலும், பயங்கரவாத முகாமை பாதுகாப்பு படையினர் அழித்தனர்.

இதனை தொடர்ந்து அங்கிருந்து துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் போன்ற ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.

இதுதொடர்பாக அசாம் முதல்வர், ஹிமந்த பிஸ்வா சர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,‘மாநிலத்தில் இடைத்தரகர்கள் ராஜ்ஜியத்தை ஒழிக்கும்விதமாக சட்டவிரோத நிலத்தரகு நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வருவாய்த்துறை அலுவலகங்களில் பொதுமக்களை தொந்தரவுபடுத்தும் இடைத்தரகர்களின் செயல்பாடு முடிவுக்கு வர வேண்டும். அதற்காக அவர்களுக்கு எதிரான அரசின் நடவடிக்கை தொடரும்’ என்று தெரிவித்துள்ளார்.

நிருபர்களிடம் பேசிய முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா, ‘அரசு அலுவலகங்களில் இடைத்தரகர்கள் செயல்பட அதிகாரிகள் அனுமதிக்கக்கூடாது, பொதுமக்களும் சில நாட்கள் பொறுத்திருந்திருந்து முறைப்படியே தங்கள் பணிகளை முடித்துக்கொள்ள வேண்டுமே தவிர, இடைத்தரகர்களை நாடக்கூடாது’ என்றும் அவர் அறிவுறுத்தினார்.