வாக்குக்கு பணம் கொடுத்தால் தங்கம் கேளுங்கள் - பிரேமலதா விஜயகாந்த் அறிவுரை

Vijayakanth DMDK Erode
By Thahir Feb 20, 2023 04:51 AM GMT
Report

அதிமுக, திமுக இரண்டு கட்சிகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் போல போலத்தான் என பிரேமலதா தெரிவித்துள்ளார்.

வாக்கு சேகரிப்பில் பிரேமலதா 

ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் 27-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகளில், ஒவ்வொரு கட்சியினரும் தீவிர முனைப்புடன் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், ஒவ்வொரு கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில், தேமுதிக வேட்பாளர் ஆனந்தை ஆதரித்து, தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த அவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

வாக்குக்கு பணம் கொடுத்தால் தங்கம் கேளுங்கள் - பிரேமலதா விஜயகாந்த் அறிவுரை | Ask Gold For Vote Premalatha Vijayakanth

அந்த வகையில், வீரப்ப சத்திரம், கருங்கல்பாளையம், கேஎஸ் நகர், ஆர்கேவி சாலை உள்ளிட்ட இடங்களில் வாக்கு சேகரித்தார்.

தங்கத்தை கேட்டு வாங்குகள் 

மிக பிரதான தொழிலாக நெசவுத்தொழில் மற்றும் விவசாயம் இருப்பதால் நெசவாளர்கள் மற்றும் விவசாயிகள் தேமுதிகவிற்கு தங்களது ஆதரவை தெரிவிக்க வேண்டும்.

வாக்காளர்களை ஆடு மாடு போன்று குறிப்பிட்ட இடங்களில் அடைத்து வைத்து அவர்களுக்கு பணம், பிரியாணி கொடுத்து அடிமையாக மாற்றி உள்ளனர்.

இந்த சூழல் தொடர்ந்து நீடித்தால் இடைத்தேர்தலை நிறுத்த வேண்டும். திமுக ஆட்சியில், பால் விலை, சொத்து வரி, மின் கட்டணம் உயர்வு உள்ளிட்டவற்றால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதிமுக, திமுக இரண்டு கட்சிகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் போல போலத்தான். இரண்டு கட்சிகளும் மிகப்பெரிய ஊழல்வாதிகள்.

திமுக அதிமுக கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தால் பணத்தை மட்டும் வாங்கிக் கொள்ளாமல் தங்கம் விலை உச்சத்தில் இருப்பதால் தங்கத்தையும் கேட்டு வாங்குங்கள் என அறிவுறுத்தியுள்ளார்.