Asian Games: தங்க வேட்டை; 4வது பதக்கத்தை வென்று அசத்திய இந்தியாவின் தங்க பெண்கள்!

India Asian Games 2023
By Jiyath Sep 27, 2023 04:04 AM GMT
Report

ஆசிய விளையாட்டு போட்டியில் 4வது தங்க பதக்கத்தை வென்றுள்ளது இந்தியா.

ஆசிய விளையாட்டு

19வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

Asian Games: தங்க வேட்டை; 4வது பதக்கத்தை வென்று அசத்திய இந்தியாவின் தங்க பெண்கள்! | Asian Games India Won 4Th Gold Medal

இந்த போட்டியில் நேற்றுவரை இந்தியா 10 மீ ஏர் ரைபிள் துப்பாக்கிச்சுடுதல், மகளிர் கிரிக்கெட், குதிரையேற்றத்தில் தங்கம் வென்றது. இன்று நடைபெற்ற மகளிர் 50 மீட்டர் ரைபிள் போட்டியில் இந்தியாவின் மணினி கவுசிக், சிப்ட் கவுர் சம்ரா, ஆஷி சவுக்சி ஆகியோர் அடங்கிய மகளிர் அணி வெள்ளி பதக்கம் வென்று அசத்தியுள்ளனர்.

7வது இடத்தில் இந்தியா 

மேலும், மகளிர் 25 மீட்டர் ரைபிள் போட்டியில் இந்தியாவின் மனு பேக்கர், ரிதம் சங்வான், ஈஷா சிங் ஆகியோர் மேலும் ஒரு தங்கத்தை வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளனர். போட்டியில் இந்திய அணி மொத்தம் 1,759புள்ளிகளை பெற்றுள்ளது.

Asian Games: தங்க வேட்டை; 4வது பதக்கத்தை வென்று அசத்திய இந்தியாவின் தங்க பெண்கள்! | Asian Games India Won 4Th Gold Medal

இதனால் இந்தியாவின் மொத்த பதக்க எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது. 4 தங்கம், 5 வெள்ளி, 7 வெண்கல பதக்கங்களுடன் தற்போது பட்டியலில் இந்தியா 7வது இடத்தில் உள்ளது.