பிரபஞ்ச அழகி பட்டத்தை கைப்பற்றிய ஆர் போனி கேப்ரியல் - குவியும் வாழ்த்து...!

World
By Nandhini Jan 15, 2023 10:28 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

பிரபஞ்ச அழகியாக அமெரிக்காவைச் சேர்ந்த ஆர் போனி கேப்ரியல் பட்டத்தை கைப்பற்றியுள்ளார். இவருக்கு சமூகவலைத்தளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

பிரபஞ்ச அழகியாக ஆர் போனி கேப்ரியல்

லூசியானா மாகாணத்தில் உள்ள நியூ ஆர்லியன்ஸ் நகரில் 71வது பிரபஞ்ச அழகி போட்டியில் (மிஸ் யுனிவர்ஸ் 2022) பிரபஞ்ச அழகி 2022-ன் பெயர் அறிவிக்கப்பட்டது. இந்தப் போட்டியில், உலகம் முழுவதிலும் இருந்து 84 பெண்கள் மகுடத்துக்காகப் போட்டியிட்டனர்.

நடைபெற்ற இப்போட்டியில், அமெரிக்காவின் ஆர்'போனி கேப்ரியல் பிரபஞ்ச அழகி பட்டத்தை கைப்பற்றினார். வெனிசுலாவைச் சேர்ந்த டயானா சில்வா 2வது இடத்தையும், டொமினிகன் குடியரசின் அமி பெனா 3வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

இப்போட்டியில் இந்தியா சார்பாக, கர்நாடகாவைச் சேர்ந்த திவிதா போட்டியிட்டார். இவர் மிஸ் திவா அமைப்பின் 10-வது ஆண்டு விழாவில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 28 அன்று, லிவா மிஸ் திவா யுனிவர்ஸ் 2022 பட்டத்தை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.