Aero India 2023 - ‘Wow...’ வானத்தில் வட்டமடித்து சாகசம் நடத்திய போர் விமானங்கள்....!

Viral Video Karnataka Bengaluru Flight
By Nandhini Feb 13, 2023 08:20 AM GMT
Report

பெங்களூருவில், 14வது சர்வதேச விமான கண்காட்சியில், வாகனத்தில் உயரப்பறந்து சாகசத்தில் ஈடுபட்ட விமானங்களின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

வானத்தில் வட்டமடித்து சாகசம் நடத்திய போர் விமானங்கள்

இன்று கர்நாடக மாநிலம், பெங்களூவில் ஏரோ இந்தியா 2023 விமான கண்காட்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். யெலஹங்காவில் உள்ள விமானப் படை நிலையத்தில் நடைபெற்று வரும் 14-வது ஏரோ இந்தியா விமானக் கண்காட்சியில், போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் பல சாகசங்களை நிகழ்த்திக் காட்டி வருகிறது.

விமானிகள் போர் விமானங்களை வானில் வட்டமிட்டும், டைவ் அடித்து சாகசம் நிகழ்த்தி வருகின்றனர்.

சி 17 போர் விமானத்துடன் சூரிய கிரண் விமானங்கள் சாகசத்தில் ஈடுபட்டது. இந்நிகழ்ச்சியில் 32 நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள், 29 நாடுகளின் விமானத் தளபதிகள் கலந்து கொண்டனர்.

இந்த கண்காட்சியில் ஏர்பஸ் எஸ்.இ.மற்றும் போயிங் கோ நிறுவனங்களிடமிருந்து 100 பில்லியன் டாலர் மதிப்புள்ள 500 ஜெட் விமானங்கள் வரை வாங்குவதற்கான ஒப்பந்தத்தை ஏர் இந்தியா அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

தற்போது இது குறித்த வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.   

asia-s-biggest-air-show-2023-bengaluru