ஆசிய கோப்பை Final: IND ᴠs SL ; சிராஜின் பந்துவீச்சில் சரிந்தது இலங்கை - 5 விக்கெட் வீழ்த்தி அசத்தல்!
ஆசிய கோப்பை இறுதி போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார் முகமது சிராஜ்.
ஆசிய கோப்பை
ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரை இலங்கை மற்றும் பாகிஸ்தான் இனைந்து நடத்துகிறது. கடந்த மாதம் தேதி தொடங்குய இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய 6 அணிகள் பங்கேற்றன.
இதில் சூப்பர்4 சுற்றில் முதல் இரண்டு இடங்களை பிடித்த, இந்தியா மற்றும் இலங்கை அணிகள் பைனலுக்கு முன்னேறின. இன்று (செப்டெம்பர் 17) கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடக்கும் பைனலில் இரு அணிகளும் மோதுகின்றன. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது.
முகமது சிராஜ்
ஆரம்பம் முதலே இந்தியாவின் பந்துவீச்சில் தடுமாறிய இலங்கை அணி 31 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்துள்ளது. முகமது சிராஜ் வீசிய இரண்டாவது ஓவரில் அடுத்தடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.
இதுவரை 5 ஓவர்களை வீசியுள்ள முகமது சிராஜ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இலங்கை அணியில் குசால் மெண்டிஸ் 17 ரன்களும், துனித் வெல்லலகே 8 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளனர்.