பாகிஸ்தான் பவுலர் தசைப்பிடிப்பு இந்திய வெற்றிக்கு காரணமல்ல : ரவீந்திர ஜடேஜா
பாகிஸ்தான் பவுலருக்கு ஏற்பட்ட தசைப்பிடிப்பு இந்திய அணியின் வெற்றிக்கு காரணமல்ல என்று ரவீந்திர ஜடேஜா விளக்கமளித்துள்ளார்.
இந்தியா பாகிஸ்தான்
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது யுஏஇயில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி தன்னுடைய முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்த்து விளையாடியது.
அந்தப் போட்டியில் ஹர்திக் பாண்ட்யா பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன்காரணமாக இந்திய அணி பாகிஸ்தான் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.இந்திய அணி இன்று நடைபெறும் போட்டியில் ஹாங்காங் அணியை எதிர்த்து விளையாட உள்ளது.
தசைப்பிடிப்பு வெற்றிக்கு காரணமல்ல
இந்த நிலையில்இந்திய அணியின் வெற்றிக்கு பாகிஸ்தான் பவுலர் நசீம்ஷாவுக்கு ஏற்பட்ட தசைபிடிப்புதான் இந்திய அணியின் வெற்றிக்கு சாதகமாக அமைந்ததாக பாகிஸ்தானை சேர்ந்த விமர்சகர்கள் சிலர் கூறிய நிலையில் , அந்த விமர்சனங்களுக்கு ரவீந்திர ஜடேஜா பதில் அளித்துள்ளார் அதில் .
ஜடேஜா விளக்கம்
நசீம்ஷாவுக்கு தசைபிடிப்பு இல்லை என்றாலும் நாங்கள் நிச்சயம் ஜெயித்திருப்போம் , எவ்வுளவுதான் சிறந்த பவுலராக இருந்தாலும் டி20 கடைசி 2-3 ஓவர்களில் ,பவுலருக்கு அழுத்தான் இருக்கவே செய்யும் , ஆனால்பாகிஸ்தான் பவுலர்கள் தசைப்பிடிப்பு இந்திய வெற்றிக்கு காரணமல்ல என்று ரவீந்திர ஜடேஜா விளக்கமளித்துள்ளார்.