இந்திய அணியை வீழ்த்தி பாகிஸ்தான் த்ரில் வெற்றி - வேதனையில் ரசிகர்கள்

Virat Kohli Indian Cricket Team Pakistan national cricket team Asia Cup 2022
By Thahir Sep 04, 2022 06:52 PM GMT
Report

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றுள்ளது.

அடுத்தடுத்து விக்கெட் இழப்பு

சூப்பர் 4 சுற்றின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியும், பாகிஸ்தான் அணியும் மோதின.

துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இந்திய அணியை வீழ்த்தி பாகிஸ்தான் த்ரில் வெற்றி - வேதனையில் ரசிகர்கள் | Asia Cup 2022 Pakistan Won The Match Loss India

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்தது.

இந்திய அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 60 ரன்களும், கே.எல் ராகுல் மற்றும் ரோஹித் சர்மா தலா 28 ரன்களும் எடுத்தனர்.

இந்திய அணியை வீழ்த்தி பாகிஸ்தான் த்ரில் வெற்றி - வேதனையில் ரசிகர்கள் | Asia Cup 2022 Pakistan Won The Match Loss India

பாகிஸ்தான் அணி சார்பில் அதிகபட்சமாக ஷாதப் கான் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார் மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.

பாகிஸ்தான் த்ரில் வெற்றி

இதன்பின் 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எட்டக்கூடிய இலக்கை துரத்தி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு அந்த அணியின் முக்கிய வீரரான பாபர் அசாம் 14 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தார்.

மூன்றாவது விக்கெட்டிற்கு களமிறங்கிய ஃப்கர் ஜமான் 15 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இதன்பின் களத்திற்கு வந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய முகமது நவாஸ் 20 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து கொடுத்தார்.

இந்திய அணியை வீழ்த்தி பாகிஸ்தான் த்ரில் வெற்றி - வேதனையில் ரசிகர்கள் | Asia Cup 2022 Pakistan Won The Match Loss India

நீண்ட நேரம் தாக்குபிடித்து வழக்கம் போல் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய முகமது ரிஸ்வான் 51 பந்தில் 71 ரன்கள் எடுத்து கொடுத்தார்.

இதன்பின் வந்த குஷ்தில் ஷா 11 பந்தில் 14 ரன்களும், 8 பந்தில் 16 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் பரபரப்பான போட்டியில் 19.5 ஓவரில் இலக்கை எட்டிய பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணி சார்பில் அனைத்து பந்துவீச்சாளர்களும் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்