ஆசிய கோப்பை கிரிக்கெட் : பாகிஸ்தான் - ஹாங்காங் அணிகள் இன்று மோதல் - இரு அணிகளும் பலப்பரீட்சை

Cricket Pakistan national cricket team Hong Kong Asia Cup 2022
By Nandhini Sep 02, 2022 06:07 AM GMT
Report

இன்று நடைபெறும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் - ஹாங்காங் அணிகள் மோதிக் கொள்ள உள்ளன. இதற்காக இரு அணிகளும் பலத்த பலப்பரீட்சையில் இறங்கியுள்ளன. 

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் டி20

துபாயில் 15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 27ம் தேதி தொடங்கி செப்டம்பர் 11-ம் தேதி வரை நடைபெற உள்ளன.

இரு பிரிவுகளாக 6 அணிகள்

இதில் நடப்பு சாம்பியனான இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய 6 அணிகள் கலந்து கொண்டுள்ளன. இவை இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருக்கிறது. 7 முறை சாம்பியனான இந்தியாவுடன், பாகிஸ்தான், ஹாங்காங் ஆகிய அணிகள் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றிருக்கின்றன. அதேவேளையில் 5 முறை பட்டமும் வென்ற இலங்கையுடன், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகள் ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ளன.

முதலாவது போட்டி

ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் முதலாவது போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கையை அணியை வீழ்த்தியது.

பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா

ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் 2வது போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொண்டன. இதில் 19.4 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 148 ரன்களை எடுத்து, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தியது.

ஹாங்காங்கை வீழ்த்திய இந்தியா

ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் நேற்று முன்தினம் இரவு ஹாங்காங் - இந்திய அணிகள் நேருக்கு நேர் மோதின. இப்போட்டியில், 40 ரன்கள் வித்தியாசத்தில் ஹாங்காங்கை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது.

வங்காளதேசத்தை வீழ்த்திய இலங்கை

ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில், நேற்று இரவு நடைபெற்ற 5-வது லீக் ஆட்டத்தில் இலங்கை-வங்காளதேச அணிகள் (பி பிரிவு) மோதிக் கொண்டது. இப்போட்டியில், இலங்கை அணி 19.2 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 184 ரன்கள் குவித்து 2 விக்கெட் வித்தியாசத்தில் திரில்லான வெற்றியை பெற்றது.

asia-cup-2022-pakistan-hong-kong

பாகிஸ்தான் - ஹாங்காங் அணிகள் இன்று மோதல்

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்றுடன் லீக் சுற்று நிறைவடைகிறது. இதில் 'ஏ' பிரிவில் இன்று பாகிஸ்தான் அணி, ஹாங்காங் அணி நேருக்கு நேர் மோதிக் கொள்கிறது. இவ்விரு அணிகளும் தங்களது முதல் ஆட்டங்களில் இந்தியாவிடம் தோற்றது குறிப்பிடத்தக்கது.

இந்தியா ஏற்கனவே சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. சூப்பர் 4 சுற்றுக்கு வரும் இன்னொரு அணி எது என்பது இன்றைய ஆட்டத்தில் தெரிந்து விடும். பாகிஸ்தான் - ஹாங்காங் அணிகள் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.     

இன்று நடைபெறும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் - ஹாங்காங் அணிகள் மோத உள்ள நிலையில், இரு அணிகளும் பலத்த பலப்பரீட்சையில் இறங்கியுள்ளன.