Asia Cup 2022 : விராட் நீங்க எங்களோட பெரிய இன்ஸ்பிரேஷன் - கோலியை நெகிழ வைத்த ஹாங்காங் அணி

Virat Kohli Indian Cricket Team Hong Kong Asia Cup 2022
By Irumporai Sep 01, 2022 03:08 AM GMT
Report

நேற்று நடைபெற்ற ஆசிய கோப்பையில் ஹாங்காங் அணியை 40 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. துபாயில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹாங்காங் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

சூப்பர் 4 க்கு முன்னேறிய இந்திய அணி

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் குவித்தது. இந்திய அணி சார்பில் சூர்யகுமார் யாதவ் 68 ரன்களுடனும், விராட் கோலி 59 ரன்களுடனும் கடைசி வரை களத்தில் இருந்தனர்.

Asia Cup 2022 : விராட் நீங்க எங்களோட பெரிய இன்ஸ்பிரேஷன் - கோலியை நெகிழ வைத்த ஹாங்காங் அணி | Asia Cup 2022 Kohli Recieves Hongkong Team Jersey

அடுத்து களமிறங்கிய ஹாங்காங் அணி 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியை வென்றது.

இந்நிலையில் நேற்றைய போட்டியின் போது ஹாங்காங் அணி சார்பில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு ஒரு பரிசு வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து விராட் கோலி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நீங்க  இன்ஸ்பிரேஷன் விராட்

Asia Cup 2022 : விராட் நீங்க எங்களோட பெரிய இன்ஸ்பிரேஷன் - கோலியை நெகிழ வைத்த ஹாங்காங் அணி | Asia Cup 2022 Kohli Recieves Hongkong Team Jersey

அதன்படி அவருக்கு ஹாங்காங் அணி சார்பில் ஒரு ஜெர்ஸி பரிசாக வழங்கப்பட்டுள்ளது. அந்த ஜெர்ஸியில் சில வரிகளும் இடம்பெற்றுள்ளன. அதில், “விராட் கோலி நீங்கள் பல தலைமுறை வீரர்களுக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்ததுக்கு எங்களது நன்றி. நாங்கள் எப்போதும் உங்களுடன் துணை நிற்போம். அடுத்து நிறையே நல்ல நாட்கள் உங்கள் கிரிக்கெட் பயணத்தில் இடம்பெற உள்ளது. அன்பும் ஆதரவுடனும் ஹாங்காங் அணி என்று எழுதப்பட்டுள்ளது.

இதை விராட் கோலி தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டேட்டஸாக பதிவிட்டுள்ளார். அத்துடன் இது என்னை மிகவும் நெகிழ வைத்துள்ளது. இது ஒரு இனிமையான பரிசு என்றும் கூறியுள்ளார். அத்துடன் ஹாங்காங் அணிக்கு தன்னுடைய நன்றியையும் விராட் கோலி தெரிவித்துள்ளார்.