இந்திய அணி 101 ரன்கள் வித்யாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி மிரட்டல் வெற்றி
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் இந்திய அணி 101 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் இந்திய அணியும், ஆஃப்கானிஸ்தான் அணியும் மோதின.
துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் வெறும் 2 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் குவித்தது.
இந்திய அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 122* ரன்களும், கே.எல் ராகுல் 62 ரன்களும் எடுத்தனர்.
இதன்பின் 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை துரத்தி களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணி, புவனேஷ்வர் குமாரின் மிரட்டல் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 9 ரன்கள் எடுப்பதற்குள் நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றியது.
மூன்றாவது விக்கெட்டிற்கு களமிறங்கிய இப்ராஹிம் ஜார்டன் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 64 ரன்கள் எடுத்து கொடுத்தாலும், மற்ற வீரர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியதால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 111 ரன்கள் மட்டுமே எடுத்த ஆஃப்கானிஸ்தான் அணி, 101 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.