பாபர் அசாமை மடக்கிய ஹாங்காங் பந்துவீச்சாளர் : வைரலாகும் வீடியோ

Pakistan national cricket team Hong Kong Asia Cup 2022
By Irumporai Sep 02, 2022 06:38 PM GMT
Report

ஆசிய கோப்பை தொடரில் பி பிரிவில் இந்தியா ஏற்கெனவே சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இரண்டாவது அணியாக பாகிஸ்தான் அல்லது ஹாங்காங் அணிகளில் ஒரு அணி தகுதி பெற முடியும்.

பாகிஸ்தான் -ஹாங்காங்

இந்த நிலையில் இன்று கடைசி குரூப் போட்டி நடைபெறுகிறது. அதில் பாகிஸ்தான் -ஹாங்காங் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஹாங்காங் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

வைரலாகும் வீடியோ

இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் களமிறங்கினர். அதில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் 3வது ஓவரில் 9 ரன்கள் எடுத்திருந்த போது ஹாங்காங் பந்துவீச்சாளர் இஹ்சான் கான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அப்போது பாபர் அசாம் கொடுத்த கேட்சை சிறப்பாக இஹ்சான் கான் பிடித்தார். இந்த கேட்ச் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பலரும் ஆச்சரியத்துடன் வியந்து பார்த்து வருகின்றனர்