கிரிக்கெட்டில் மீண்டும் மோதும் இந்தியா- பாகிஸ்தான் - தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தேதிகள் மற்றும் போட்டி விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
அதன்படி 2022ஆம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஆகஸ்ட் 27 ஆம் தேதி முதல் செப்டம்பர் 11 ஆம் தேதி வரை இலங்கையில் நடைபெறவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆசிய நாடுகளுக்கு இடையேயான இந்த கிரிக்கெட் தொடர் நடைபெறுவது வழக்கம். ஆனால் கொரோனா காரணமாக 2 ஆண்டுகளாக ஒத்திவைக்கப்பட்ட இத்தொடர் மீண்டும் நடக்கவுள்ளது.
இதனிடையே இந்தாண்டு டி20 வடிவில் நடத்தப்படும் இந்த தொடருக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் ஆகஸ்ட் 20 ஆம் தேதி முதல் ஆரம்பமாகும் எனவும் , இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் தகுதிச் சுற்றில் தேர்வு செய்யப்படும் இரண்டு அணிகள் என மொத்தமாக ஆறு அணிகள் பங்கேற்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்த தகுதிச் சுற்றுப் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகம், குவைத், சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் ஆகிய அணிகள் இடையே நடைபெறவுள்ளது. இதுவரை நடந்துள்ள 14 சீசன்களில் இந்திய அணி 7 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இலங்கை அணி 5 முறையும், மீதமுள்ள 2 சீசன்களிலும் பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இதற்கான அட்டவணை விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.