ஆசிய குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்..! தங்கம் வென்றார் பூஜா ராணி..!

india asia boxing gold medal
By Anupriyamkumaresan May 31, 2021 06:05 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in இந்தியா
Report

துபாயில் நடைபெற்று வரும் ஆசிய குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் பூஜா ராணி தங்கம் வென்றுள்ளார்.

டெல்லியில் மே 21 முதல் 31-ம் தேதி வரை ஆசிய குத்துச்சண்டை போட்டி நடைபெறுவதாக இருந்தது. இந்தியாவில் கொரோனா பரவல் அதிமாக உள்ளதால் டெல்லியில் நடைபெற இருந்த ஆசிய குத்துச்சண்டை போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது.

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ள இந்தியாவின் பூஜா ராணி, 75 கிலோ எடை பிரிவில் தங்கம் வென்றுள்ளார்.

ஆசிய குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்..! தங்கம் வென்றார் பூஜா ராணி..! | Asia Boxing Gold Medal Pooja Rani India

இறுதிச்சுற்றில் உஸ்பெகிஸ்தானின் மெளலோனாவை 5-0 என்கிற புள்ளிக்கணக்கில் வீழ்த்தினார். இதற்கு முன்பு 2019-ல் நடந்த போட்டியிலும் 81 கிலோ எடை பிரிவில் பூஜா ராணி தங்கம் வென்றிருந்தார்.

இதனை தொடர்ந்து 2021 நடந்த இந்த போட்டியிலும் இவரே தங்கம் வென்று மேலும் இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.