சென்னை அணிக்காக விளையாடுவாரா அஸ்வின்? - ரசிகரின் கேள்விக்கு சொன்ன பதில்
2022 ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் மீண்டும் விளையாட வாய்ப்பு கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்ற கேள்விக்கு சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் பதிலளித்துள்ளார்.
2022 ஐபிஎல் தொடரில் ஏற்கனவே உள்ள 8 அணிகளுடன் புதிதாக 2 அணிகள் இணைக்கப்பட்டு, வீரர்களுக்கான மெகா ஏலமும் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக ஒவ்வொரு அணியும் தங்கள் அணியில் தக்க வைக்கப்பட்ட வீரர்கள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளனர்.
அதன்படி டெல்லி அணி தக்க வைத்த நான்கு வீரர்களைத் தவிர மற்ற அனைவரையும் மெகா ஏலத்தில் விட்டுள்ளது. இதனால் அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ஏலத்தில் கலந்து கொள்ள நிலையில் அவர் எந்த அணிக்கு செல்வார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஒருவேளை இந்த ஏலத்தில் மீண்டும் சிஎஸ்கே அணி அவரை தேர்வு செய்யும் பட்சத்தில் சென்னை அணிக்காக அஸ்வின் விளையாடுவாரா? என்ற கேள்வியெழ அதற்கு அஸ்வின் பதிலளித்துள்ளார்.
சென்னை அணி என்னுடைய மனதிற்கு நெருக்கமான ஒரு அணி. இந்த அணி எனக்கு ஒரு ஸ்கூல் போன்றது. இங்குதான் நான் எல்கேஜி, யுகேஜி முதல் பத்தாம் வகுப்பு வரை படித்தேன். பிறகு 11, 12 ஆகிய வகுப்புகளை வேறு ஒரு பள்ளியில் படித்தேன். மீண்டும் காலேஜ் முடித்த பிறகு நான் வீட்டிற்கு தானே வந்தாக வேண்டும். அதே போன்று மீண்டும் சென்னை அணி இந்த ஏலத்தில் எடுக்கும் பட்சத்தில் கட்டாயம் சிஎஸ்கே அணிக்காக திரும்பி சிறப்பாக விளையாடுவேன் என தெரிவித்துள்ளார்.