தோனியோட கேப்டன்சி மட்டும் இல்ல இதுவும்தான் – மனம்திறந்த அஷ்வின்
இந்தியாவில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை நடைபெற்று முடிந்துள்ள 14 சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில் தற்போது 15 வது சீசன் மார்ச் மாதம் இறுதியில் துவங்க உள்ளது.
இந்த தொடருக்கான மெகா ஏலம் வருகின்ற பிப்ரவரி 12, 13 ஆகிய தேதிகளில் பெங்களூரில் நடக்க உள்ள வேளையில் அனைத்து அணிகளும் தங்களது அணிக்கு தேவையான வீரர்களை வாங்க தயாராக உள்ளனர்
இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரரும், தற்போதைய இந்திய வீரருமான அஸ்வின் தோனி குறித்து சில கருத்துகளை பகிர்ந்து கொண்டுள்ளார்.
இதுகுறித்து அஸ்வின் கூறுகையில் ஐபிஎல் தொடரில் எப்போதுமே மிகவும் சிறப்பாக செயல்பட்டு வரும் கேப்டன்களில் தோனியும் ஒருவர். இதுவரை அவர் சிஎஸ்கே அணியை சிறப்பாக வழிநடத்தி நான்கு முறை சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்துள்ளார்.
எந்த அளவிற்கு தோனி கேப்டன்சியில் சிறந்து விளங்கினாரோ அந்த அளவிற்கு போட்டியை சிறப்பாக முடித்து கொடுப்பதிலும், பினிஷிங் ஷாட்டுகளை விளையாடுவதிலும் அவர் கை தேர்ந்தவர்.
அந்த விடயம் பற்றி பேசாதது சற்று வருத்தம்தான். அந்த வகையில் மிகச் சிறந்த பினிஷர் என்று தான் தோனியை கூறுவதாக அஸ்வின் தெரிவித்துள்ளார்.