தென்னாப்பிரிக்காவின் ஸ்டெயின் சாதனையை முறியடித்த அஸ்வின் - ரசிகர்கள் உற்சாகம்
டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் அபார சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் பகலிரவு போட்டியாக நடைபெற்ற இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 238 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.
இதனிடையே 3வது நாளான நேற்று நடைபெற்ற போட்டியில் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் டெஸ்ட் போட்டியில் தனது 440-வது விக்கெட்டை கைப்பற்றினார். இதன் மூலம் அவர் தென்னாபிரிக்கா அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் டேல் ஸ்டெயின் 439 விக்கெட்கள் என்ற சாதனையை முறியடித்துள்ளார்.
மேலும் அஸ்வின் டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட் கைப்பற்றிய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் 8வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.