உலகக்கோப்பை அணியில் இணைக்கப்பட்ட அஸ்வின்...நீக்கப்பட்டது யார்..?
வரும் அக்டோபர் 5-ஆம் தேதி துவங்கவுள்ள உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் சேர்க்கப்பட்டுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகக்கோப்பை
இந்த ஆண்டிற்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் அக்டோபர் 5-ஆம் தேதி துவங்கி நடைபெறவுள்ளது. இதற்கான இந்திய அணி முன்னரே அறிவிக்கப்பட்டது. அதில், இந்திய அணியின் வலதுகை சுழற்பந்துவீச்சாளர்கள் யாரும் சேர்க்கப்படாதது பெரும் விமர்சனத்தை பெற்றது.
இந்திய துணை கண்டங்களில் சுழற்பந்துவீச்சுகள் சிறப்பாக எடுபடும் என்பதாலும், வலக்கை சுழற் பந்துவீச்சாளர் இருந்தால் அது பெரும் எதிர்ப்புகளை இந்தியாவில் பெற்றது. இந்நிலையில் தான் இன்று ரவிச்சந்திரன் அஸ்வின் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நீக்கப்பட்டது யார்
இந்திய அணியில் அவர் சேர்க்கப்பட்டார் என்றால், அவருக்கு பதிலாக யார் அணியில் நீக்கப்பட்டுள்ளார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்திய அணியின் மற்றொரு சுழற்பந்துவீச்சாளரான அக்சர் பட்டேலுக்கு காயம் ஏற்பட்டது.
இதன் காரணமாக அக்சர் பட்டேல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் சேர்க்கப்படவில்லை. இதில் தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் சேர்க்கப்பட்டார். இந்நிலையில், அவரின் காயம் குணமடைய காரணத்தினால் தான், தற்போது அணியில் அஸ்வின் சேர்க்கப்பட்டுள்ளார்.