"எங்கிருந்துடா புடிச்சாங்க உன்ன" - ஷர்துல் தாகூரை தமிழில் கலாய்த்த அஸ்வின் :வைரலாகும் வீடியோ
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் பேசிய நகைச்சுவை விஷயம் ஸ்டம்ப் மைக்கில் பதிவாகி வைரலாகியுள்ளது.
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் முதல் இன்னிங்ஸில் 202 ரன்களுக்கே ஆட்டமிழந்த இந்திய அணி தென்னாப்பிரிக்காவை 229 ரன்களுக்கு சுருட்டியது.
2வது நாள் ஆட்டத்தின் தொடக்கத்தில் தென்னப்பிரிக்க அணி பெரும் ஸ்கோரை அடிக்கும் அளவிற்கு பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடியது. கேப்டன் டின் எல்கர் - கீகன் பீட்டர்சன் ஜோடியை பிரிக்க முடியாமல் இந்திய அணி தடுமாறி வந்தது. குறிப்பாக சீனியர் பவுலர்களான முகமது ஷமி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோருக்கு தொடர்ந்து வாய்ப்பளிக்கப்பட்ட போதும் விக்கெட் விழவில்லை.
Just was about to tag you?? pic.twitter.com/WGf0WEL0dP
— Jacob Richard (@jacobrich07) January 4, 2022
அப்போது ஷர்துல் தாகூருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. வந்த வேகத்தில் செட்டிலான பேட்ஸ்மேன்களை டீன் எல்கரை 28 ரன்களுக்கும், மறுமுணையில் இருந்த கீகன் பீட்டர்சனை 62 ரன்களுக்கும் வெளியேற்றி அசத்தினார். இதன் பின்னர் ஷர்துலின் ஆதிக்கம் தான் ஆட்டம் முழுவதும் இருந்தது. தொடர்ந்து சிறப்பாக விளையாடிய அவர், 2வது இன்னிங்ஸில் மட்டும் 7 விக்கெட்களை சாய்த்து அசத்தினார்.
இதனை பார்த்து வியந்துப்போய் அஸ்வின் கூறிய வார்த்தைகள் தான் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. ஷர்துல் 5வது விக்கெட்டை கைப்பற்றிய போது, அவரின் முதல் 5 விக்கெட் ஹவுலுகாக சக வீரர்கள் ஒன்றிணைந்து பாராட்டினர். அப்போது அங்கு வந்த அஸ்வின், யார்ரா நீ, எங்கிருந்துடா புடிச்சாங்க உன்ன? நீ பால் போட்டாலே விக்கெட் விழுவுது" என நகைச்சுவையாக கூறினார்.
அஸ்வின் கூறிய இந்த வார்த்தைகள் அருகே இருந்த ஸ்டம்ப் மைக்கில் பதிவானது. தவறென்று பட்டால், களத்தில் பளிச்சென கூறிவிடும் ரவிச்சந்திரன் அஸ்வின் இளம் வீரர்களை தட்டிக்கொடுத்து பாராட்டுவதிலும் குறை வைக்க மாட்டார் என ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.