சி.எஸ்.கே அணியில் ஜடேஜாவை தக்கவைக்க காரணம் இதுதான் : மனம் திறந்து பேசிய அஸ்வின்
இனி சிஎஸ்கே அணியில் ஜடேஜா இடம் பெறமாட்டார் என தகவல் வெளியான நிலையில் ரவிச்சந்திர அஸ்வின் விளக்கம் கொடுத்துள்ளார்.
ஜடேஜா
இது குறித்து அஸ்வின் தனது யூடியூப் பதிவில் ரவீந்திர ஜடேஜா இந்த ஐபிஎல் தொடரில் சி.எஸ்.கே அணிக்காக விளையாட மாட்டார் என்றெல்லாம் பல பேச்சுகள் இருந்தன.
ஆனால் இந்த முறையும் ஜடேஜா சென்னை அணிக்காக தான் விளையாடுகிறார்.
ஜடேஜாவை டிரேடிங் மூலம் மாற்ற நினைத்தார்கள் என்றெல்லாம் பேசப்பட்டது. ஆனால் அதெல்லாம் எதுவுமே உண்மை கிடையாது.
அஸ்வின் விளக்கம்
ஜடேஜா போன்ற ஒரு வீரரை வெளியேற்றினால் சென்னை அணிக்கு 16 கோடி மிச்சமாகும். ஆனால் அவரது இடத்திற்கு வேறொரு இந்திய வீரரை நிரப்புவது என்பது முடியாத காரியம்.
ஜடேஜா போன்று எல்லா துறைகளிலும் சிறப்பாக செயல்பட கூடிய ஒரு வீரருக்கு பதிலாக மாற்று இந்திய வீரரை எப்படி தேர்வு செய்ய முடியும்.
அதேபோன்று ஜடேஜா வேறொரு அணிக்கு மாறினால் அந்த அணி எவ்வளவு பலமாகும் என்பதை யோசித்துப் பாருங்கள்.
இதனால்தான் சென்னை அணி நிர்வாகமும் அவரின் மதிப்பை உணர்ந்து தக்க வைத்துள்ளது என்றார்.